பக்கம்:கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


குழுவைச் சேர்ந்த இன்னொருவர் உள்ளே வருவார் எப்பொழுதும் 2 பேர் உள்ளிருந்து ஆட வேண்டும்.

குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்தைத் தொட்டு அக்குழுவினர் முடித்துவிட வேண்டும்.

நேரங் கடந்துவிட்டால் அந்த ஆட்டமுறை முடியும். அடுத்த குழுவினருக்குத் தொடுகின்ற வாய்ப்பு போய் சேரும்.

குறிப்பிட்ட நேரத்திற்குள் அதிக முறை பந்தைத் தொட்டு, அதிக வெற்றி எண்கள் எடுத்திருக்கின்ற குழுவே வெற்றிபெறுகிறது.

குறிப்பு: பந்து வட்டத்தைவிட்டு வெளியே சென்றால், பந்து வெளியே போவதற்குரிய சூழ்நிலையில் அருகிலிருந்த எதிர்க் குழுத் தொடும் ஆட்டக்காரரே ஓடிச்சென்று எடுத்து வந்து தரவேண்டும்.

யாரையும் வலிந்து தள்ளி பந்தை தொடக்கூடாது. ஆடுவோர் அனைவரும் ஆட்டத்தின் தன்மையை உணர்ந்து, உற்சாகத்துடன் ஆட வேண்டும்.

நிதமும் கூடி விளையாடி, இதமான வாழ்வில் ஏற்றமுறத் திகழுங்கள், மகிழுங்கள்.