பக்கம்:கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


வரையில்தான் அந்த நடுவில் நிற்கும் ஆட்டக்காரர் வட்டத்தின் மையத்தில் நிற்கவேண்டும். பந்தைப் பிடிக்காமல் தவற விடுகிறவர். நடு இடத்தை விட்டு வெளியேற்றப்படுவார்.

பிறகு, வேறொருவர் அதாவது இன்னொரு பந்தை வைத்திருப்பவர், நடு இடத்திற்கு வருவார். அவரும் ஒரு இடத்திலிருந்து, பந்தை எதிரே இருப்பவரிடம் எறிந்து, பிறகு ஒவ்வொருவராக மாற்றி மாற்றி எறிந்து பிடிக்க வேண்டும்.

இதுபோல், கடைசிவரை, கீழே விடாமல் பந்தைப் பிடித்துக் கொண்டிருப்பவரே, இறுதியில் வெற்றி பெற்றவராவார்.

குறிப்பு:

பந்தை எறியும் போது, ஒழுங்காக, ஆள் இருக்குமிடம் பார்த்தே எறியவேண்டும். தாறுமாறாக எறிபவரும், எதிரில் பிடிப்பவர் பந்தைக் கீழே விழவிட்டு விடவேண்டும் என்ற கெட்ட எண்ணத்துடன் தன் விருப்பம் போல் வேண்டுமென்றே விளையாடுவோரையும் உடனே ஆட்டத்தைவிட்டு வெளியேற்றி விட வேண்டும்.

13. ஒடி வந்து பிடி

அமைப்பு:

முன் ஆட்டம் போலவே, எல்லோரும் வட்டமாக நின்றுகொண்டிருக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு எண்ணைக் கொடுத்திருக்கலாம்; அல்லது பெயர்