பக்கம்:கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்

31


குறையாமல் இருக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

குறிப்பு:

எறிகிற பந்தைத் தவறாக எறிந்தாலும் சரி, வருகிற பந்தை முறையாகப் பிடிக்காமல் நழுவ விட்டாலும் சரி, அவர் ஆட்டத்தை விட்டு வெளியேற்றப்படுவார்.

வட்டமும் குறுகிக்கொண்டே வர, இறுதியாக ஒருவர் இருக்கும் வரை, ஆட்டம் தொடரும்.

15. குரங்காட்டம் (அ)

அமைப்பு:

வந்திருக்கும் ஆட்டக்காரர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, வட்டத்தை அமைத்துக்கொள்ள வேண்டும். எல்லோரும் வட்டத்தைச் சுற்றி நின்று கொண்டிருக்க, வட்டத்திற்குள்ளே ஒருவர் மட்டும் நிற்க வேண்டும். வட்டத்தில் நிற்பவர்களில் ஒருவரிடம் ஒரு பந்து இருக்க வேண்டும். அதுதான் ஆடுதற்கு உதவியாக இருக்கும்.

ஆடும் முறை:

ஆடுதற்குரிய சைகை கிடைத்தவுடன், மையத்தில் நிற்பவர், பந்தை வைத்திருப்பவரை நோக்கி ஓடி, பந்தைத் தொடவோ அல்லது பிடுங்கிக்கொள்ளவோ முயற்சிக்க வேண்டும்.