பக்கம்:கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


வெளியே வந்து, தான் விரும்பும் ஒரு பாவனையை செய்து காட்டி, அதன்படி விளையாட முயற்சிப்பர்.

குறிப்பு:

முன்னால் ஆடியவர் யாரையும் தொடமுடியாமற் போகும் பொழுது, ஆட்டத்தை நிறுத்தி, எல்லைக்கு வெளியே வந்து, மீண்டும்வேறு ஒன்றைப்போல பாவனை காட்டி அதன்படி ஆட முயற்சிக்க, ஆட்டம் தொடரும்.

22. நிழலாட்டம் !

அமைப்பு:

வெய்யில் நேரத்தில் விளையாடக்கூடிய விளையாட்டாகும். முன் ஆட்டம் போலவேதான் ஆடுகள அமைப்பும் பிறவும்.

எல்லோரும் ஆடுகள எல்லைக்குள்ளே நின்றுகொண்டிருக்க, விரட்டித் தொடுபவராக ஒருவர் மட்டும், ஆடுகள எல்லைக்கு வெளியே நிற்பார்.

ஆடும் முறை:

அனைவரும் ஆடுகளத்தினுள் நிற்கும் பொழுது, அவர்களின் நிழல் தரையில் விழுமே, அந்த நிழலை முழுதும் அல்லது அதில் ஒரு பகுதியையாவது விரட்டித் தொடுவோர் மிதித்தால், அந்த நிழலுக்குரியவர் தொடப்பட்டதாகக் கருதப்படுவார்.

தொடப்பட்டவர் நிழல் தொடும் ஆளாக மாறி விரட்ட, ஆட்டம் மீண்டும் தொடரும்.