பக்கம்:கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்

71


ஆட்டத்தை நடத்துபவர் விசில் மூலம் சைகை கொடுத்தவுடன், நடந்தவர்கள் அப்படி அப்படியே நகராமல் நின்று விடவேண்டும். சிறுசிறு வட்டத்திற்குள் நின்று கொண்டிருப்பவர்கள் எல்லோரும் ஆட்டமிழந்து விடுவார்கள்.

மீண்டும் மீதியுள்ளவர்களை நடக்கச் செய்து, குழலூதி நிறுத்திப் பார்க்கும் பொழுது, யார் யார் வட்டத்திற்குள் நிற்கின்றார்களோ, அவர்கள் எல்லாம் ஆட்டமிழக்கிறார்கள்.

குறிப்பு:

விசில் ஒலிக்குப் பதிலாக, இசைத்தட்டைப் பயன்படுத்தலாம். வட்டத்தின் மேலுள்ள சிறுசிறு வட்டங்களுக்குப் பதிலாக நாற்காலிகளையும் வைத்துக் கொள்ளலாம்.

இறுதியாக யார் இருக்கிறாரோ, அவரே வென்றவராவார்.

47. வட்டத்துக்குள் சட்டம்

அமைப்பு:

முன் ஆட்டம் போலவே, பெரிய வட்டம் ஒன்றைப் போட்டு, அந்தக் கோட்டின் மேலேயே, ஒருவர் நிற்பதற்கேற்ப, சிறு சிறு வட்டங்களை, சுற்றிலும் போட்டிருக்க வேண்டும்.

பிறகு, வட்டத்தின் மையப் பகுதியிலும் ஒருவர் நிற்பதற்கேற்ப ஒரு சிறு வட்டம் வரைந்திருக்க வேண்டும்.