பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99 எதிரியின் நடமாட்டத்தைப் பொறுத்து, உமது "தடுப்புத் திறமையை, அமைப்பை மாற்றிக்கொண்டே யிருக்கவும். அருகில் இருக்கும் எதிரியைத் தடுக்க, ஒரு கையை உயர்த்தியும் மற்ருெரு கையை பக்கவாட்டிலும் வைத்துத் தடுக்க வேண்டும். முன் வைத்திருக்கும் ஒரு காலை, தரையில் சமமாக (Flat) வைத்திருந்தால்தான், முன்னும் பின்னும் இலாவக மாக, வேகமாகத் திரும்பவும், ஒடவும் முடியும். பந்துடன் எதிரில் உள்ள எதிரியை, திரையிட்டுக் கை விசி மறைக்கும் முறையைப் பின்பற்றவும். பலகையில் மோதிவரும் பந்தை (Rebound) எடுப்பதி லும் பிடிப்பதிலும் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும். எதிரியின் ஏமாற்றுதலுக்குச் சீக்கிரம் ஏமாந்துவிடக் -சிட்டாது. பந்துடன் ஓடி வருகின்ற ஒருவரை வளையத்திற்கு அருகாமையில் வரவிடாமல், பக்கக் கோடுகளுக்குப் பக்க மாகவே சென்று ஆடும்படிதான் விடவேண்டும். ஆத்திரத்தில் ஆள்மேல் மோதிக்கொண்டு, தவறுகள் பெற்று, ஆட்டத்தைவிட்டு வெளியேற்றப்பட்டு விடும் :சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ளவே கூடாது. உணர்ச்சி வசப்பட்டு தவறுக்கு ஆளாகவோ, ஆளாக் கவோ கூடாது. விளையாட்டின் புனிதமே அதல்ை பாழ் பட்டுவிடும். பார்வையாளர்கள் பேச்சுக்கும் ஏச்சுக்கும் செவி -சாய்க்காதீர். எதிரிகள் 5 பேர் மட்டும் தான் உமது கண்ணுக்குத் தெரியவேண்டும். குழு ஒற்றுமையைக் கட்டிக் காத்துக் கொள்ள வேண்டும்.