பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 எதிரிக்கு முன்னல் சென்றுதான் பங்தைப் பிடித்தாட வேண்டும். தோல்வி மனப்பான்மை மனதில் தோன்றவே. ժուL-Ո 51 தாக்கி ஆடவும் தடுத்தாடவும் போன்ற சூழ்நிலைகள் ஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் மாறி மாறி வரும். = எதிர் வரும் சந்தர்ப்பங்களையும், புதிராய் தோன்றும் பிரச்சினைகளையும் சமாளித்து, விளையாடும் முறைகள் அனைத்திலும் விதிகளே மீருமல், எதிர்த்தாடுவோரை வெறுக்காமலும் பழிக்காமலும் இருந்து ஆடுவதுதான் உண்மையான விளையாட்டு வீரர்களுக்கு அழகாகும். வெற்றி மட்டுமே விளையாட்டின்நோக்கமல்ல, முக்கியமு. மல்ல. விளையாட்டில் கற்றுக்கொள்கின்ற அன்பு,பொறுமை, அடக்கம், ஒற்றுமை, அடுத்தவரை மதிக்கக் கற்றுக் கொள்ளும் அறிவு, புலனடக்கம் போன்ற குணங்கள் தான் வாழ்க்கைக்கும் தேவைப்படுகின்றன என்பதால், வாழ்க் கையை முன்னேற்றும் கருவியாகத்தான் விளையாட்:ை-க் கொள்ளவேண்டும். - வாழ்க்கையைப் பயன்படுத்திப் பதப்படுத்தி, வளம் நிறைந்ததாக மாற்றி நம்மை இன்பத்தில் ஆழ்த்துகின்ற விஜன்யாட்டை, இன்பத்திற்காகவே ஆடி மகிழ்வோம். போட்டிக்காகவே போராடுவோம். புதிய புதிய முறைகளைக் கற்றுத் தேர்ந்து பெருமை. பெற வாழ்வோம்' என்ற குறிக்கோளுடன் கூடைப் பந்தாட்டத்தை ஆடி மகிழ்வோம். கூடைப் பந்தாட்டத்தின் நோக்கமே இதுதான். இந்த நோக்கம் நிறைவேறிவிட்டால், இதுவே நம்மை ஆனந்த மயமான உலகத்திற்கு அழைத்துச் செல்லும் அற்பக உணர்வோவியமாக மாறும்.