பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூடைப் பந்தாட்டத்தின் பிறப்பும் சிறப்பும் 'அதிக விரைவும், அடிக்கடி ஒட்டமும், ஒப்பில்லாத, உழைப்பும்' ஆட்டக்காரர்களிடையே நிலவ வேண்டிய சூழ் கிலேயினே எப்பொழுதும் அதியற்புதமாகத் தந்து, ஆட வைத்துக் களித்திருக்கும் கூடைப் பந்தாட்டம், அகில உலக மக்கள் அனைவராலும் ஆடப்படுகின்ற ஆட்டமாகவும். ஆர்வமுடன் ஏற்றுக்கொண்ட ஆட்டமாகவும் திகழ்ந்து வருகிறது. அமெரிக்காவிலே பிறந்த விளையாட்டுக்களிலே அதிக மான புகழையும், பெருமையையும் கிரம்பப்பெற்ற: கூடைப் பந்தாட்டம், பொழுது போக்குவதற்காகவே பாரில் பிறப்பெடுத்தது. செல்வந்தர்களின் சிங்தையிலே ஏற்பட்ட ஏக்கத்தின் தீர்வுக்கு வழி கண்டுபிடிக்க விழைந்த டாக்டர் நெய்சுமித் என்பவரின் அருங் கண்டுபிடிப்பே. கூடைப் பந்தாட்டமாகும். உலக விளையாட்டரங்கிலே உன்னதமான இடத்தைப் பெற்றிருப்பதுடன், முக்கியமான பெருவிளையாட்டுக்களிலே (Major Games) முதன்மை பெற்று கூடைப் பந்தாட்டம் விளங்குகிறது. ஆர்வமிகு உழைப்பிலே அயராது ஈடுபடு: கின்ற அமெரிக்கர்களுக்கு, ஏதாவது ஒரு புதுமையினைச் செய்ய வேண்டும், புதுமையினைப் புகுத்த வேண்டும் என்று நினைத்தவுடனேயே அரிய முயற்சியினை மேற்கொள்ளும் பழக்கம். ஆண்டாண்டு காலமாகவே இருந்துவந்திருக்கிறது.