பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 விளேயாடுவதற்கு எத்தனையோ ஆட்டங்கள் இருங் தாலும், மழை காலத்திலும், பனி நாட்களிலும் விளையாடி மகிழ வேண்டும் என்ற தாளாத விருப்பத்திற்கேற்பவும், எப்பொழுதுமே செய்து வருகின்ற உடலழகுப் பயிற்சிகள், பளு தூக்கும் பயிற்சிகள், கம்பிமீது பயிற்சிகள் போன்ற செயல்களில் தினம் உண்டாகின்ற சலிப்பினை மாற்றிக் கொள்ளவும்,மக்கள் வழிதேடிக் கொண்டிருந்த காலத்திலே ஒர் உணர்ச்சிமிக்க சூழ்நிலை உருவாகியது. எந்த நேரத்திலும், எக்காலத்திலுமே ஆடக்கூடிய ஒர் இனிய ஆட்டம் வேண்டுமென்றவர்களுக்கு, டாக்டர் கெய்சுமித் அவர்கள் வழிகாண முயன்ருர்; அவரது அரிய முயற்சியின் விளைவே புதிய பந்தாட்டம் விளையாட்டுத் துறையிலே புகுத்தப் பெற்றது. ஒவ்வொரு ஆட்டத்திற்கும் ஒரு பந்து, வலை, இலக்குத் தேவைப்படுகிறதே. அந்த முறையையே பின்பற்றி ஒரு பங்தைத் தேர்ந்தெடுத்தார். வலையோடு கூடிய இலக்கு, தரைமீது இருப்பதைத் த வி ர் த் து, கைக்கெட்டாத உயரத்தில் இருந்தால் என்ன என்ற எண்ணத்தின் விளைவே கூடைப் பந்தாட்டமாக உருவாகியது, சுவர்களிலே இலக்கினைப் பதிப்பதற்கு, டாக்டர் கேட்டு அனுப்பியிருந்த ஆள் ஒருவர், மரப் பெட்டிக்குப் பதிலாக, பீச் பழங்கள் பொறுக்கி வைக்கப்பெறும் கூடை இரண் டைக் கொண்டுவந்து கொடுத்ததினால், கூடைகள் இந்த ஆட்டத்தில் முக்கிய பங்கினை ஏற்றத்ல்லாமல், கூடைப் பந்தாட்டம்' என்ற பெயரையே இறுதிவரை பெற்றுக் கொடுத்துவிட்டது.* பத்தடி உயரத்திலே புதுமையான இலக்குடன் பிறந்த இந்த ஆட்டம், கால் பந்தாட்டம், வளைகோல் பந்தாட்டம் ஆசிரியர் எழுதிய "விகளயாட்டுக்களின் கதைகள் என்ற நூலில் மேலும் விளக்கம் பெறலாம்.