பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 போன்ற ஆட்டங்களிலிருந்து மாறுபட்டிருந்ததுடன் பந்தைக் கையால் பிடிப்பதும், தடுப்பதும், எறிவதும் போன்ற அமைப்பினால், மக்களின் மனங்களை எளிதாகக் கவரத் தொடங்கியது. கூடைக்குள்ளே பந்தைக் குறிபார்த்து எறிய வேண்டும்: என்பதே ஆட்டத்தின் நோக்கம். ஆரம்ப காலத்தில், அதற். குரிய பயிற்சி இல்லாத காரணத்தில்ை, எப்பொழுதோ ஒரு. முறை பந்து, கூடைக்குள் போய் விழும். விழுந்த பங்தை மீண்டும் எடுத்து விளையாட, ஏணி யொன்றை வைத்து, ஏணிமீது ஏறியே பந்தை எடுக்க வேண்டியிருந்தது. பயிற்சியும் பழக்கமும் மிகுதியாகவே, பந்தும் அடிக்கடி கூடைக்குள்ளே விழத் தொடங்கியது. ஏணியும் ஆட்டத் தின் இடையிடையே வந்து நிற்கத் தொடங்கியது. அதல்ை ஆடுவோரின் ஆர்வம் சரியத் தொடங்கியது. ஆட்டமும் சலிப்பில்ை சரியாமல் இருக்கவே, கூடையின் அடிப்பாகம் திறந்துவிடப்பட்டு, ஆட்டத்தில் தடை நேரா வண்ணம் தடுக்கப்பெற்றது. காலக்கிரமத்தில் கூடை இடம் பெயர்ந்து கொள்ளவே, இலக்கும் இரும்பு வளையமாக மாறி வந்து விட்டது. 1891ஆம் ஆண்டு தோன்றிய இந்த ஆட்டத்தை அனை வரும் ஆரவாரத்துடன்ஏ ற்றுக்கொண்டதாலோஎன்னவோ, 1892ஆம் ஆண்டே, புகழ்பெற்று விளங்கிய ஸ்பிரிங் பீல்டு கல்லூரியில் விளையாட்டுத் துறையில் ஒரு பாடமாக சேர்க்கப்பட்டுவிட்டது. 'பந்தெடுத்துக் கூடைக்குள் போடுவது ஒரு விளை யாட்டா? பேடித்தனமான கேவலமான அலிகள் ஆடும் ஆட்டம்' என்று ஆரம்பத்தில் வாய் கிழியப் பேசி வம்பளங்த, வர்கள் வாயடைத்துப் போவதுபோல, ஆட்டம் விரைவாட்ட மாக வளர்ந்து, விரைவும் நெஞ்சுரமும், வளமார்ந்த உடல் திறனும் கலமார்ந்த நெஞ்சு கலனும் உடையவர்களே இந்த