பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 ஆட்டத்தில் நின்று ஆடிப் புகழ்பெற முடியும் என்ற நிலைக்கு உயர்ந்தது. முதலில் வந்த விதிகள் கூடைப் பந்தாட்டத்திற்குரிய விதிகள், முதன்முதலாக "முக்கோணம் என்று கூறப்படும் 'டிரை ஆங்கிள்" (Triangle) என்ற பத்திரிகையில் வெளியாயின. அந்த விதிகளில் இன்னும் மாருமல் இன்றும் இளமையோடு உரிமையோடு இருக்கும் விதிகளும் உள்ளன. பந்தினை வைத்திருக்கின்ற ஆட்டக்காரர். கையிலே பங்தை வைத்துக்கொண்டே கடந்தோ, ஒடியோ முன்ன்ேறக் கூடாது. பந்து வைத்திருப்பவரின் மேலே இடிக்காமல் அல்லது மோதாமல் தான் அவரிடமிருந்து பந்தைப் பெற வேண்டும். முரட்டுத்தனமாக ஆடுவதும், ஒருவர்மேல் ஒருவர் மோதி 'உடல் தொடர்பினை வலிய முறையில் ஏற்படுத்திக்கொள்வதும் தவருகும். ஆட்டக்காரர்களின் கைகளுக்கு எட்டாதவாறுதான் கூடை (இலக்காகிய வளையம்) பொருத்தப்படவேண்டும். . மேலே கூறிய விதிகள் நான்கும் இன்னும் மாருமலே இருந்தாலும், ஆட்டத்திலேதான் எத்தனே-எத்தது. மாற்றங்கள் வந்து போயிருக்கின்றன. விளையாட்டு தொடங்கிய நாட்களில், கூடைக்குள்ளே பங்தை எறிய வேண்டும் என்ற ஒரு குறிக்கோளுடனேயே ஆடியபொழுது, ஒரு குழுவுக்கு 100 பேர்களுக்கு மேல் கின்று ஆடி மகிழ்க் திருக்கின்றனர். ஆட்டத்தில் வேகம் நிறைந்தபொழுது, 40, 50 பேர் என்று. அளவில் குறைந்தது. இன்னும் வளமையும் விறு விறுப்பும் மிகுந்தபொழுது, ஆடு களம் குறைந்தளவு தானே உள்ளது என்பதாலும், ஆட்டக்காரர்களுக்கு ஓடி, கிற்க, நடக்க இடம் வேண்டும் என்பதாலும், ஒரு குழுவுக்கு