பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 கிடைக்கும். (இப்பொழுது 2 தான் உண்டு). ஒரு குழு 3 முறை தவறு இழைத்தால், எதிர்க் குழுவிற்கு ஒரு வெற்றி எண் உண்டு. இப்பொழுது இந்த முறை நடைமுறையில் இல்லை. தனி எறி என்ருல் அன்றும் இன்றும் வெற்றி எண் ஒன்றுதான். இத்தகைய மாற்றங்களுடன், பள்ளிகளுக்கிடையிலும், கல்லூரிகளுக்கிடையேயும் போட்டி ஆட்டமாகவும், நாடு: நகரமெங்கும் பொழுதுபோக்கி இன்பந்தரும் ஆட்டமாகவும் விரைவாக பணியாற்றி வளர்ந்தது கூடைப் பந்தாட்டம். ஆரம்பித்த சில ஆண்டுகளுக்குள்ளாகவே, அனைத்துலகத் திற்குப் பயணம் செய்து செழிக்கத் தொடங்கியதுடன், 35 மொழிகளுக்கு மேலேயே விதிமுறைகள் மொழியாக்கம் செய்யப் பெறும் அளவுக்கு மேன்மையை, ஆட்டம் எய்தியது. ിൿ கூடைப் பந்தாட்டம் 1904ஆம் ஆண்டு செயின்ட் லூயிசில் நடைபெற்ற ஒலிம்பிக் பந்தயத்தின் போது, அமெரிக்கக் குழுக்களால் கூடைப் பந்தாட்டம் ஆடிக் காட்டப் பெற்றபோது, பார்வை யாளர்களாக வந்திருந்த அனைவரும் பார்த்துப் பரவசமுற்றுப் பாராட்டி மகிழ்ந்தனர். அதன் பயனகவே, காலம் தாழ்த்திய போதும் கவனம் திசைமாருது, 1932ஆம் ஆண்டு அகில உலகக் கூடைப் பந்தாட்டக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. 1936ஆம் ஆண்டு, கடந்த ஒலிம்பிக் பந்தயத்தில் கூடைப் பந்தாட்டமும் ஒன்ருக இணைக்கப்பெறும் பேறு பெற்று பெருமையடைந்தது. விளேயாட்டின் தந்தையான டாக்டர் ஜேம்ஸ் நெய்சுமித்தும் வானளாவிய புகழைப் பெற்ருர். வெளிநாட்டு விளையாட்டுக்கள் அனைத்த்ம், அங்கிருந்து வெளிவருகின்ற சமயப் பரப்பாளர்களாலும், சமர்புரியும் போர் வீரர்களாலும், வணிகர்களாலும் எடுத்துச் செல்லப்