பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெறுவது போலவே, கூடைப் பந்தாட்டமும் இந்தியா விற்குக் கொண்டு வரப்பட்டது. - இந்தியாவில் கூடைப் பந்தாட்டம் இந்த விளையாட்டைக் கல்கத்தாவில் முதன்முதலில் நம் காட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் 'இளங்கிறித் துவக் கழகத்தினரே. சென்னையில் உள்ள ஒய். எம். சி. ஏ. உடலியற் கல்விக் கல்லூரியின் முன்ள்ை மாணவர்களும், மற்றும் விளையாட்டு வீரர்களும், நாடு முழுதும் இந்த ஆட்டம் பரவுவதற்குரிய வழி வகைகளேச் செய்து, மக்களுக், குள் ஒர் மகோன்னத எழுச்சியை உண்டு பண்ணினர்கள். ஆட்டமும் மெல்ல மெல்ல மக்களிடையே வளர்த் தொடங் கியது. - 1934ஆம் ஆண்டு தேசிய அளவிலே கூடைப்பந்தாட்டப் போட்டி என்று ஒன்று நடைபெற்ற போதுங்கூட, ஆட்டத்தைக் கட்டிக் காக்கும் தேசிய அமைப்பு ஒன்று ஏற் படும் அளவுக்கு சிறப்பாக வளரவில்லை.அதன் பின்னர் அநேக ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 1950ஆம் ஆண்டுதான். மறைந்த திரு. C. C. ஆபிரகாம் தலைமையிலே இந்திய கூடைப் பந்தாட்டக் கழகம் தோன்றியது. இவ்வாறு மாநிலங்களிடையேயும் பல அமைப்புக்கள் தோன்றவே ஆட்டத்திற்கு மறுமலர்ச்சியும் பெரு வளர்ச்சியும் உண்டாயின. . . . கம்மவர்களும் பல போட்டிகளில் சென்று பங்கு பெற்றி ருக்கிருர்கள் என்ருலும், பெருமை பெறத்தக்க நிலையில் நாம்இன்னும் உயர்ந்தோமில்லை.ஆர்வம் கிறைய இருக்கிறது. வசதிகளும் பெருகிக்கொண்டுதான் இருக்கின்றன. பயன் படுத்துவோரைத்தான் பாரதம் எதிர்பார்த்துக் காத்திருக் கிறது. உலக நாடுகள் அனைத்தும் உள்ளத்தாலும் செயலாலும் விரும்பிக் கூடைப் பந்தாட்டத்தை விளையாடி மகிழ்ந்து, கூடைப்-2