பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 வீறுபெற்று, திறன் நுணுக்கங்கள் எல்லாவற்றிலும் தேர்ந்து, சீரிய நிலையில் விளங்குகின்றனர். மக்கட் தொகை யிலே முன்னணியில் சென்று கொண்டிருக்கும் நம் நாடு சிறிது மனம் மாறி, விளையாட்டுத்துறை பக்கம் கொஞ்சம் கவனம் செலுத்திப் பயிற்சி செய்யத் தொடங்கினல், 'பாரதத்தை வெல்லப் பாரிலே யாரும் இல்லை என்ற நிலை உருவாகும். பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கூடைப் பந்தாட்டம் ஆடப்பெறுகிறது என்ருலும், மாணவர்கள் இன்னும் உற்சாகத்துடன் ஊக்கமுடன் விளையாட வேண்டும். மாணவர் அணி மட்டும் திரண்டு விட்டால், தமது இளமையின் எழுச்சியை முறையான வழியில்ஈடுபடுத்திவிட முயன்றுவிட்டால், வழியும் சிறக்கும், வாழ்வும் சிறக்கும். அது நடக்க வேண்டுமே! சிங்தையிலே வீர உணர்வும் நாட்டுப்பற்றும், கனலாக மூள வேண்டும். கடமையுணர்வுடன் ஆடுகளத்தில் இறங்கி பயிற்சி பெறும் வேகம் பெறவேண்டும். விவேகமும் வரவேண்டும். நல்லதையே நாம் கினைக்கிருேம். நடப்பதும் அப்படித் தானே இருக்கும்! காலம் கனியும். காட்சிக்காகக் காத்திருக் கிருேம்! 晶