பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடும் முறை ஒரு குழு 5 ஆட்டக்காரர்களைக் கொண்டதாகும். ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு வளையத்தைக் குறிப்பிட்டு, அதனேக் காத்து ஆடவேண்டும் என்று ஆடுவதற்கு முன்னரே தீர்மானித்து விடுகின்ருர்கள். ஒரு குழுவானது, தனது எதிர்க்குழுவிற்குச் சொந்த மானதும் எதிர்ப்பக்கம் உள்ளதுமான வளையத்தினுள்பங்தை குறிபார்த்து எறிய முயல்வதும், அந்த முயற்சியை வளையத் திற்குரிய குழு தடுக்க முயல்வதுமே ஆட்டத்தின் நோக்க மாகும. ஆடும்பொழுது, பந்தைத் தங்கள் வசம் வைத்திருக்கும் குழு-தாக்கும் குழுவாகும். பந்தில்லாத குழு தடுக்கும் குழுவாக விளையாடும். - + = குழுவுக்கு 5 பேர் ஆட்ட வீரர்கள் என்ருேமல்லவா! அவர்கள் தங்களுக்குரிய ஆடும் இடங்களில் முதலில் நின்று கொண்டிருப்பார்கள். இரண்டு முன்னட்டக்காரர்கள். (Forwards) ஒரு மைய முன்னட்டக்காரர், (Centre Forward) இரண்டு காப்பாளர்கள் (Backs) எனப் பிரிந்து, தங்கள் வளையத்தைக் காத்து கிற்கவும், பந்துடன் முன்னேறிப் போகவும் கூடிய நிலையிலே இருப்பார்கள்.