பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்டத்தை நடத்துகின்ற நடுவர்.மைய வட்டத்திற்குள் உள்ளே இருபுறமும் கின்றுகொண்டிருக்கும் இரு குழுவைச் சேர்ந்த மைய முன்னட்டக்காரர்களின் தலைக்கு மேல் புறமாக, கைக்கெட்டாத உயரத்தில் பங்தைத் தூக்கி எறிய. எறிந்தவுடனேயே, ஆட்டம் தொடங்கிவிடும். இந்த முறைக் குத்தான் 'பந்துக்குத் தாவுதல், (Jump Ball) என்று பெயர். எறியப்பெற்ற பந்தை, தனது குழுவினரிடம் தருவதற். காகத் தட்டிவிட அவர்களின் முயற்சி ஆரம்பத்திலேயே, ஆட்டமும் விரைவு பெறுகிறது. ஒரு குழுவினர், தமது வசத்திலே பந்து கிடைத்த வுடனேயே, எதிர்க்குழுவினர் எல்லோரும் காத்துக் கொண் டிருக்கின்ற வளையத்திற்கு அருகே செல்லவும், முயற்சி யுட்னும் பந்துடனும் பாய்ந்து சென்று அதைக் குறி பார்த்து அந்த வளையத்திற்குள் எறியவுமே முயற்சி செய்வார். அந்த முயற்சிக்காக, அவர்கள் பங்தைக் கையில்ே எடுத்துவைத்துக் கொண்டவாறு ஓடிப்போகவோ, நடந்து செல்லவோ முடியாது. அவ்வாறு செய்வதும் விதிகளே மீறிய செயலாகும். தவறும் ஆகும். பிறகு எவ்வாறு பந்துடன் முன்னேற வேண்டுமென்ருல், பந்தைத் தரையிலே தட்டிக்கொண்டுதான் ஓடவேண்டும்; அல்லது, தன் அருகில் அல்லது தூரத்தில் நிற்கும் பாங்கருக்கு எறிந்து வழங்கிவிட் வேண்டும். (ப்ந்துடன் ஒடல் (Dribbling)எவ்வாறு என்பதை அங்கப் பகதியில் காண்க). 26 மீட்டர் நீளமும் 14 மீட்டர் அகலமும் கொண்ட பரப்பளவில் அமைந்த ஆடுகளம்: அதன் இருபுறமும் 10 அடி உயரத்திலே, பலகைகளின் மேல் பொருத்தப் பெற்றிருக்கும் இலக்கு என்பது 45 செ. மீ. (18"). உட்புற விட்டமுள்ள வளையமாகும். - 1 *