பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆகவே, வளையமாகிய இலக்கிற்குள் பந்தை எறிய, ஒரு முறை பந்தை இரு கைகளாலும் பிடித்துத் தரையிலே தட்டிக் கொண்டு ஒடத்தொடங்கியவர், மீண்டும் இரு கைகளிலே பந்திருக்குமாறு பிடித்து விட்டால், அடுத்து அவர் செய்ய வேண்டியது, வளையத்தை நோக்கிப் பந்தை எறிய வேண்டும் அல்லது தன் பாங்கர் ஒருவருக்கு வழங்கி விடவேண்டும். இவ்வாறு பந்தினை வாங்கியும் வழங்கியும் சென்று, முன்னேறி, வளையத்திற்குள் பங்தை எப்படி வேண்டு மாலுைம் எறியலாம். ஆனால், ஆடுகளப் பகுதி எல்லைக்குள் இருந்துகொண்டு. விதிகளே மீருத வண்ணம் எறிந்தால் வெற்றி எண் (Point) உண்டு. கோட்டிற்கு வெளியே யிருந்தவாறு குறிபார்த்து வளையத்தினுள் எறிந்தாலும் அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. கணக்கிலும் எண்ணிக்கை சேராது. விளையாடும் நேரத்தில், வளையத்தினுள் பங்தை எறி கின்ற முயற்சியில் வெற்றி பெற்ருல், அந்தக் குழுவுக்கு 2 வெற்றி எண்கள் கிடைக்கும். அதற்கு கள வெற்றி எண்' (Field Goal) Grørsp QLuir. வளையத்தில் நுழைந்த பந்து, வலையின் வழியாக இறங்கி, வெற்றி எண்ணை வாங்கிக் கொடுத்தவுடன், "கிலைப்பந்தாக (Dead Ball) மாறிவிடும். மீண்டும் அதை "ஆடும் பந்தாக மாற்றிவிட வேண்டுமானல், அந்தப் பந்து விழுந்த வளையத்தைக் காத்து நிற்கின்ற குழுவினரில் ஒருவர், அவருடைய பகுதியின் கடைக் கோட்டிற்குச் சென்று, வெளியே கின்று, பங்தை ஆடுகளத்தினுள் எறிந்து விட, ஆட்டம் தொடங்கும், தொடரும். | ஒரு குழுவினர் தவறு இழைத்தால், அவருக்கு எதிராக அவர் காத்து கிற்கும் வளையத்தை நோக்கிப் பங்தை எறிய,