பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T" ان کے தவறுக்குள்ளான எதிர்க்குழு ஆட்டக்காரருக்கு வாய்ப்புக கிடைக்கும். அவ்வாறு, ஆட்டத்தை நிறுத்தி, தடை ஏதுமின்றி, இலக்கினுள் பந்தை எறியும் வாய்ப்பினைத் தருவதற்குத் தனி எறி (Free Throw) என்று பெயர். - "தனி.எறி வாய்ப்பில் ஒருமுறை இலக்கினுள் பந்து முறையாக விழுந்து வெற்றி பெற்ால், வெற்றி எண் ஒன்றுதான் கிடைக்கும். இவ்வாறு, ஒரு போட்டி ஆட்டம் ஆடவேண்டும் 'என்ருல், அதற்குரிய மொத்த நேரம் 50 கிமிடங்களாகி விடும். இடைவேளை நேர ம் 10 நிமிடம். ஒவ்வொரு பகுதிக்கும் 20 நிமிடம் என இரண்டு பகுதிகள் (Half) உண்டு மேற்கூறிய 40 கிமிடங்களில் விளையாடி ஆட்ட இறுதியில், அதிகமான வெற்றி எண்களைப் பெற்றிருக் கின்ற குழுவே வெற்றி பெற்றதாகும். ஆட்ட இறுதியில், இரு குழுக்களும் வெற்றி எண்களில் சம எண்ணிக்கை பெற்றிருந்தால், 5 நிமிடம் மிகை நேரம்’ (Extra Time) கொடுத்து ஆடச் செய்தே, வெற்றி தோல் வியை நிர்ணயிக்க வேண்டும். இதிலும் வெற்றி தோல்வி முடிவு தெரியாவிடில், 2 நிமிடம் இடைவேளைக்குப் பிறகு மீண்டும் 5 கிமிடங்கள் மிகை நேரந்தந்து ஆடச் செய்ய வேண்டும். முதலில் தருகின்றமிகை நேரத்திற்கு மட்டும், நாணயம் சுண்டுவதின் மூலம்,காக்கின்ற வளையமுள்ள ஆடுகளத்தின் ஒரு பக்கத்தைத் .ெ த ரிங் .ெ த டு த் துக் கொள்ளலாம். தொடர்ந்து வரும் மிகை நேரத்திற்கு நாணயம் சுண்டுதல் தேவையில்லை. - - -- குறுகிய ஆடுகளத்தினுள்ளே இவ்வாறு பந்துடன் பாய்ந்தும், ஒடியும், கின்றும், வாங்கியும் வழங்கியும் விளை