பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தள்ளாட்டத்தையே தரும் என்பதால், எதிர்த்திசை தடுப்பு சக்தியைப் பயன்படுத்தியே, கால்களே தரையில் உதைத் து ஊன்றியே சமநிலையில் கிற்கப் பழகிக்கொள்ள வேண்டும். இயல்பு 98ు (Relaxation) உடல் நெகிழுந் தன்மையிலும், வளைந்து கொடுக்கும் அமைப்பிலும், மனம்போல இயங்கக்கூடிய வகையிலும் இருப்பதையே இயல்பு நிலை என்கிருேம். உடலுறுப்புக்கள் விறைப்பாக (Tension) இருந்தால், அவை செயலுக்குப் பயன்படுவதில்லை. வளையாத வில் அம்பெய்யப் பயன்படாதது போல, நெகிழுந் தன்மை யில்லாத உறுப்புக்கள் கடப்புக்கு உதவாது. மீறி, உறுப்புக்களே வருத்திலுைம், வற்புறுத்திலுைம், அவை, திருத்தமுற இயங்குவதில்லை. வேதனைதான் கிடைக்கும். விறைப்பாக விரல்களே வைத்துக்கொண்டு, பந்தைப் பிடித்துப் பாருங்கள்? விரல்கள் மடங்கிக்கொள்ளும், வலி: யுண்டாகும். அப்படியே பங்தைப் பிடித்துவிட்டாலும், எறிவதற்கு எந்த வகையிலும் ஏற்றதாகவும் இருக்காது. அதல்ை, குறி தவறித்தான் போகுமே ஒழிய, பந்து நெறி. யுடன் நேராகப் போய்ச் சேராது. விறைப்பாகவே உடல் இயங்குவதால், தசைகளில் பிடிப்பு (Pull) ஏற்படுகிறது. உறுப்புக்கள் களைத்து. விடுகின்றன. செயல்களும் மலைத்துப் போகின்றன. அத்துடன், நோக்கமும் கிறைவேருமல் போய்விடுகின்றன. அதல்ை, பதட்டமான மனநிலை ஏற்பட, செயலும் சீர்கெட்ட கிலேயிலே செல்கிறது. எனவே, இங்கிலையை உணர்ந்து கொண்டு இயல்பாக இருக்கும் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த இனிய நிலையை, பாதி மனத்தளவிலும் மீதியை, தசைகளேப் பலப்படுத்துகின்ற முறையிலுமேபெற முடியும்