பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காக்கும் கலை ஆட்டம் தொடங்கியதிலிருந்து முடியும் வரை விரைவாகவே ஆடப்படுகின்ற ஆட்டம் இது. எப்பொழுது பந்து வரும்? எப்பொழுது பந்தை அ னுப்பலாம்? எப்படி ஆடலாம் என்றவாெ றல்லாம், எண்ணுவதற்கே நேர மில்லாதவாறு இருக்கும் சுறுசுறுப்பான ஆட்டமாகும். பந்து தன் வசம் இருக்கும்போது, எதிர்க் குழுவினர்கள் அதனைக் கவர முயற்சிக்கின்ற பல முயற்சிகளைத் தடு த்தும், அவைகளிலிருந்து விடுபட்டு, குறிபார்த்து வளையத்திற்கு எறிய முயலும்பொழுது எதிராளிகள் விளக்கின்ற தடை களைக் கெடுத்தும், பாங்கருக்குள் வ ழங்கிக்கொள்வதை எதிரிகள் இடைமறித்து எடுத்துக் கொள்வதை விடுத்தும். தன்னைத் தளராது, தவருது, நிலையினின்றும் மாருது காத்துக்கொள்ளும கலையானது, ஒவ்வொரு ஆட்டக்கார ருக்கும் தேவையான மிக முக்கியமான பண்புகளாகும். ஆகவே, பந்தை தான் இழக்காமல் எ திரிகளிடமிருந்து காத்துக் கொண்டும், எதிர்க் குழுவினருக்குக் கு றிப்பிட்ட ஓரிடத்திலிருந்து கின்று குறிபார்த்து எறிந்தால் வெற்றி கிடைக்கும். கிடைக்கிறது என்பதை அறிந்து, எதிராளி களேத் தடுத்தும், அந்த இடத்திற்கு அவர்களை வர விடாதவாறு காத்தும் அதனைத் ெ தாடர்ந்து, முன்னேறும் முயற்சிகளில் முழுமூச்சுடன் ஈடுபடுத லுமே, சிறந்த ஆட்டத்தினை ஆட வழி வகுக்கும். ஆடுவோருக்குரிய அறிவுரை விளையாட்டு வீரர்கள் விளையாடும்பொழுது ஒரு சில முறைகளைத் தெரிங் துகொண்டு விளையாடினல்தான், வி.ஆர்யாடுத்ற்குரிய நோக்கம் முழுமை பெறும், எதிர் பார்க்கின்ற இனிய பயனும் கிடைக்கும்.