பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ᎽᏰᏎ இருவரும். தாங்கள் எந்த வளையத்திற்குள் பந்தை எறியவேண்டுமோ, அந்த வளையம் இருக்கும் திசையைப் பார்த்துத் தான் கின்றுகொண்டிருக்க, பிற ஆட்டக்காரர்கள் எட்டு பேரும், அவரவர்க்குரிய இடங்களில் கின்றுகொண் டிருப்பார்கள். அவர்கள் இருவருக்கும் இடையில், அவர்கள் கைகளுக்கு எட்டாத உயரத்தில் இருப்பதுபோல, வட்டத்திற் குள்ளேயே இருக்குமாறு கொஞ்சம் உயரத்திலே பங்தைத் துரக்கி நடுவர் உயர்த்திப் போடுவார் (எறிவார்). அந்தப் பந்து உயரத்தின் உச்சநிலைக்குச் சென்றவுடன், நடுவரிடமிருந்து விசில் ஒலி கிளம்ப, அதுவே ஆட்டத்தின் ஆரம்பமாகும். ஆட்ட மணிப்பொறியும் (Games Watch) அப்பொழுதுதான் ஒடத் தொடங்கும். அப்பொழுது, வட்டத்திற்குள் கிற்கின்ற இருவரும் பந்துக்காக உயரே தாவி, தமது பாங்கருக்குப்பந்து கிடைத்து ஆடுவதற்கேற்ப, தட்டிவிட முயற்சிப்பார்கள். (அட்டைப் படம் காண்க). இந்த முறையைத்தான் பந்துக்காகத் தாவுதல் என் கிருர்கள். பந்துக்காகத் தாவும்பொழுது ஒருசில விதிமுறை களையும் கடைப்பிடிக்கவேண்டும். இருவரில் ஒருவர் பந்தைத் தொட்டாடுவதற்கு முன்னர், யாரும் வட்டத்தை விட்டு வெளியே வ ரக் கூடாது. தான் ஒருமுறை தொட்டாடிய பின், தொடர்ந்து இரண்டாவது தடவையும் பிறர் அந்தப் பந்தைத் தொட்டாடு முன்னர் விளையாடக் கூடாது. ஆனால்,இன்ைெருவர் அந்தப் பங்தைத் தொட்டாடி விட்டால், இவர் மீண்டும் தொடர்ந்து விளையாடலாம். தாவும்பொழுது உடல் தொடர்பு ஏற்படாமலும் பார்த்துக் கொள்ளவேண்டும். - முதன் முறையாக ஆட்டம் துவங்குகிற பொழுதும், முதல் ஆட்டப் பகுதி நேரம் (First half) முடிந்து, இடை iே&ளக்குப் பிறகு இரண்டாவது பகுதி ஆட்டம்