பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. முன்னேற முடியாதது போலவே, வளையத்தின் அருகில் இருந்துகொண்டே பங் ைத வளையத்திற்குள் எறிய முடியாதவாறும் காவல்முறை மிகக் கடுமையாக இருக்கும். ஆகவே, அதுபோன்ற சூழலில், பந்தைத் தன் பாங்கருக்கு வழங்கவும், தட்டிக் கொண்டு ஓடவும், தன் பயணத் திசையை மாற்றிக் கொள்ளவும், அத்துடன் பிடிகிலேப் பந்து ஏற்படாமல் காத்துக் கொள்ளவும், தான் கிற்கும் கிலேக் கேற்ப கால்களை நிலைப்படுத்திக் கொண்டு, அசைந்து கொடுக்கும் தன்மைக்கே சுழல் தப்படி என்று பெயர். நிலையாக ஒருகால் நிற்க, மறு காலை வசதியான கிலே வரும்வரை அங்குமிங்கும் சுற்றிச் சுற்றிச் சுழற்றி வைத்துக் கொள்வதாலேயே "சுழல் தப்படி என்கிருேம். சுழற்றும் காலை எத்தனைமுறை வேண்டுமானலும் மாற்றி மாற்றி, அப்படி இப்படி வைக்கலாம். வட்டம் போடலாம். ஆல்ை, நிலையான கால், ஊன்றப்பட்ட இடத்திலிருந்து சிறிது நகர்க் தாலும், நகர்ந்ததாகக் கருதப்பட்டு அசைந்து விட்டார் (Moving) என்ற தவறுக்கு ஆளாகிவிட நேரிடும். இப்பொழுது, எது நிலையான கால்? எது நகரும் கால்: என்பதை நாம் முதலில் உணர்ந்து கொள்ளவேண்டும். - ஒருவர் இன்ைெருவரிடம் இருந்து பந்தைப் பெறு கின்ருர். அப்பொழுது, அவர் இரு கால்களையும் தரையில் வைத்து கின்றவாறே பந்தைப் பெறுகின்ருர் என்ருல், தனது இரண்டு கால்களில் ஏதாவது ஒரு காலை நிலையானதாகவும் (Pivot Foot), மற்ருெரு காலை நகரும் காலாகவும் (Real Foot) வைத்துக் கொள்ளலாம். அந்தந்த நேரத்திற் கேற்பவும், வசதியைப் பொறுத்தும் வைத்துக்கொள்ளலாம். அதாவது இடது கால் நிலையானதாக இருந்தால், வலது கால் நகரும் காலாகவும், வலது கால் நிலையானதாக நின்ருல், ககரும் காலாக இடது காலும் என்று வைத்து ஆடவேண்டும்.