பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 புறத்தில் இருந்து வரும் தாக்குதல்களிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம். வளைய இலக்கு 10 அல்லது 15 அடி தூரத்தில் இருக்கும் பொழுது, பந்து வைத்து முன்னேறும் ஆட்டக்காரர் வழி மறிக்கப்படாமல், எறியும் குறியை மறிக்கும் கைத் தடுப்பு இருந்தால், உடனே கொஞ்சம் குனிந்து, ஒரு காலை சுழலாக வைத்து, விரைவாக மாற்றி மாற்றி ஆடினல் எதிரியும் ஏமாறலாம். சிறிது இடைவெளி கிடைத்தவுடனே உயரே எழும்பிக் குதித்து, பந்தைக் குறியோடு இலக்கினுள் எறிய, அங்கே ஏமாற்ற இந்த சுழல் முறை பயன்படும். கூடைப் பந்தாட்டத்தில், சுழல் தப்படியானது மிக மிக முக்கியமான திறன் நுணுக்கமாகும். இதற்குக் கால் திறன். உடல் சமநிலை, உடலுறுப்புக்களின் ஒன்றிய ஒருங்கிணைந்த ஒத்துழைப்பும் வேண்டும். (5) உள்ளெறிதல் (Throw-in) பக்கக் கோட்டிற்கு வெளியே சென்ற பந்தை, மீண்டும் ஆட்டத்தில் இட்டுத் தொடங்க 'உள்ளெறிதல் பயன்படுகிறது. பந்தைக் கடைசியாக யார் தொட்டு விளையாடி பக்கக் கோட்டிற்கு வெளியே செல்லக் காரணமாக இருந்தாரோ, அவரது எதிர்க் குழுவினருக்குப் பங்தை உள்ளெறிகின்ற வாய்ப்பினை நடுவர் வழங்குவார். - s * பங்தைப் பெற்ற எதிர்க் குழுவினர், பக்கக் கோட்டிற்கு வெளியே நின்று, எறிவதற்கான நேரத்தை 5 விடிைகளுக்கு மேல் போகாமல், ஆடுகளத்தினுள் இடுதல் வேண்டும். + பந்தை உள்ளெறிவதற்காக உருட்டி விடலாம் (Roll) எறியலாம் (Throw). மேலே கிளம்புமாறு தரையில் மோதி; g ciron Golovitih (Bounce). i.