பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(40 எதிர்க் குழுவின் பகுதியில் பந்து, பக்கக் கோட்டையோ கடைக் கோட்டையோ கடந்து சென்றுவிட்டால், நடுவர் அருகில் வந்து எறிபவரிடம் உள்ள பந்தைத் தொட்ட பிறகே, அவர் எறியவேண்டும். ஏனென்ருல், உள்ளெறிவது யார் என்பதை உறுதி செய்வதற்காகவே நடுவர் அவ்வாறு செய்யவேண்டும். பந்து வெளியே போன இடத்திற்கருகிலேதான். கோட்டிற்கு வெளியே கின்றுதான், உள்ளெறிய வேண்டும். (6) zsupssir (Fouls) ஆடுகளமோ அளவில் சிறியது. 86'X45 என்ற பரப் பளவு உடையது. அதனுள் பத்து ஆட்டக்காரர்கள் பந்துக் காகப் பாய்ந்தும், பதுங்கியும், கிலேயாக கின்றும், அலையாக ஒடியும், திரிந்தாடும்பொழுது, ஒருவருடன் ஒருவர் உடல் தொடர்பு கொள்வதுபோல, இடிப்பதும் மோதுவதும் இயல்புதான். என்ருலும், அதற்கென ஒருவழி, ஒரு முறை வேண்டும் என்பதற்காகவே வழிமுறைகளே அமைத்திருக் கின்றனர். • எதிர்க் குழுவினருடன் உடல் தொடர்பு ஏற்படும் வண்ணம் ஆட்டத்தின் அமைப்பு இருப்பதால், ஒரு சிலர் வேண்டுமென்றே எதிர்க் குழுவினரின் மேல் முரட்டுத்தன மாக மோதுதல், இடித்தல், தள்ளுதல், விழுதல் போன்ற காரியங்களைத் தன்னிச்சையாகக் கொண்டு செயல்படு 'வின் mனர். o ஆகவே, அதனைத் தடுப்பதற்காகவே, விதியினை அமைத்து, தவறிழைத்தவர் மேல் "தவறு" (Foul) என, குறித்துக் காட்டி நடுவர் கூறி, எதிர்க் குழுவினருக்குத் .தனி எறி' எறியும் வாய்ப்பைத் தந்து விடுகிருர்.