பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 கற்பனை செறிந்த கவிதைகளாக, சுவை மிகு சொல்லோவியங்களாக, கருத்தாழ மிக்கக் கட்டுரைகளாக, கற்பாரைக் கவர்கின்ற கதைகளாக விளையாட்டு நிகழ்ச்சிகளைப் படைத்து, வானெலி, வாராந்திர இதழ்கள். நூல் கள் மூலமாக விளையாட்டுத் துறைக்கு இவர் செய்யும் பணியை, தமிழ் கூறும். நல்லுலகமே புகழ்ந்து போற்றுகிறது. விளையாட்டுப் பந்தயங்களில் பயிற்சி பெறுபவராக, தருபவராக நடத்துன ராக, பார்வையாளராகப் பெற்ற அனு: பவங்களேத் தமது தமிழிலக்கியப் புலமையுடன், விளையாட்டுத் துறை. நூல்களாக, தனித் தமிழ் இலக்கியநூல் களேப் படைக்கும் திறமைக்கு இவரது நூல்களே சான்ருகும். விளையாட்டுக் களஞ்சியம், வி2ள யாட்டுத் துறை ஆங்கிலத் தமிழ் அகராதி போன்ற ஆராய்ச்சி நூல்களை எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியரின் சீரிய பணி வெற்றி பெற. வாழ்த்துகிருேம். பதிப்பகத்தார்