பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 மாகப் பிடிக்காமல், இயல்பாக இதமாகப் பிடிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். வேறு சிலசமயங்களில் இடுப்புக்குக் கீழாக பந்து வரும். அப்பொழுது, கட்டைவிரல்கள் மேற்புறமும்,விரிந்திருக்கும் ஏனைய விரல்கள் கீழ்ப் பகுதியிலும், பந்து வந்து வசதி: யாகத் தங்கியிருக்குமாறும், வந்த வேகத்தில் துள்ளி விழாமல் தேங்கியிருப்பதற்கேற்ற வகையிலும் முழங் கைகளே தேவைக்கேற்றவாறு மடக்கியும் அமைத்துத்தான். பங்தைப் பிடிக்க வேண்டும். அவ்வாறு பிடித்த பந்தை உடனே பாங்கருக்காக எறிவதற்கும், அல்லது வளையத்தை நோக்கிக் குறிபார்த்துப் போடுவதற்கும் அல்லது எதிரே சூழ்ந்திருக்கும் எதிர்க் குழுவினரை ஏமாற்றி அங்குமிங்கும் பந்துடன் ஒடி அலேக் கழிப்பதற்கும், பந்துடன் ஒடுவதற்காகக் கீழே பந்தை தரையில் போட்டு, தட்டிக்கொண்டு ஒடுவதற்கும். கேரங் கடத்தாமல் நிலைமையை அனுசரித்துப் பயன்படுத்தி செயல் படுவதற்கும் ஏற்ற முறைதான் மேலே கூறிய பங்தைப் பிடித்தாடும் முறையாகும். பந்தைப் பிடித்தாடுதல் என்றவுடன், 'தன்னிடம் ப்ந்து வரட்டும், பந்து வந்ததும் பாய்ந்து பிடித்துக்கொள்ளலாம்' என்று எண்ணி ஒரே இடத்தில் நிற்காமல், காத்துக் கிடக் காமல், பந்தை நோக்கி ஓடியே பெறவேண்டும். இல்லையேல். மற்ற ஆட்டக்காரர்கள் முன்னுக்கு ஒடிச்சென்று, பங்தை அடைந்து ஆடும்பொழுது, எதிர்பார்த்து ஏமாற்றமடைந்து. பந்து வைத்திருப்பவரின் பின்ல்ை ஒடிச் சென்று பரிதாபமாக கிற்பது. பார்வையாளர்களுக்கு ஏளனமாகத் தோன்றுவதுடன், ஆடுவோருக்கும் ஆட்டத்தில் ஓர் லயிப்பு இல்லாமலும் போய்விடும். இவ்வாறு பந்தைப் பிடிக்கும்பொழுது, இரண்டு கால்களையும் அகலமாக விரித்து வைத்து கின்றும் கூடைப்-4