பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிடிக்கலாம். அவரவர் பழக்கத்திற்கேற்ப, ஒரு காலை முன்னதாக வைத்தும் பங்தைப் பிடிக்கலாம். அது அவரவர் பயிற்சியின்படி பழக்கத்தின்படியே அமைந்துவிடும். அகலமாகவோ, முன்னும் பின்னுமோ எப்படியோ, கால்களை வைத்துக்கொண்டும் பங்தைப் பிடிக்கலாம். பந்து வருகின்ற திசை நோக்கி நின்று பிடிப்பதும், பக்கவாட்டில் இருந்து பிடிப்பதும், மேல் நோக்கியும் பின்புறமும் என்றவாறு பந்து பல திசைகளிலிருந்தும் வரும். அதற் கேற்றவாறு தயாராக கின்று பந்தைப் பிடித்தாடுதல் வேண்டும். இந்தத் திறனுக்கு, உடல் சமநிலையும் (Balance), பதமான இயல்பான உடல் கிலேயும், சிறப்புற செயல்படும் ஊக்கமும் இருந்தால், மிகவும் எளிதாக வந்துவிடும். (2) ußgl-sir B-sd (Dribbling) ஆட்டத்தின் வேகத்திற்கும், விரைவாக வழங்கி ஆடுவதற்கும் 'பந்துடன் ஒடும் முறையை முதலில் பயன் படுத்தினர்கள் முன்னேர்கள். இவ்வாறு ஒடுவதில் திராத குழப்பமும், திகைப்புண்டாக்கும் சச்சரவும் அடிக்கடி ஆட்டத்தில் கிகழத் தொடங்கின. 1894லிருந்து 1926ஆம் ஆண்டுவரை, இந்தப் பிரச்சினேக்கு எப்படி முடிவுகட்டுவது என்பதற்காக, ஆட்ட வல்லுகர்கள் அனைவரும் மூளையைப் போட்டுக் குழப்பிக்கொண்டனர். + தலைக்கு மேலேயே பலமுறை பந்ை தத் தட்டிக்கொண்டு ஒடியதும், இரு கைகளினலேயே பங்தைத் தட்டியாடிய முறையும், இன்னும் பல பழக்கங்களையும் மாற்றிவிட வேண்டும் என்று அவர்கள் முடிவு கட்டினர். அதன் பயனக ஒரு கையால்தான் பங்தைத் தட்டிக்கொண்டு ஓடவேண்டும் என்ற விதிமுறையைப் புகுத்தினர்.