பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 பந்தைத் தரையிலே வேகமாக அடித்து மோதாமல், மெதுவாக இதமாகத் தரையிலே தள்ளியும், பிறகு மேலே வந்து அதன்பின் பந்து கீழே இறங்கும் வரை காத்திருந்து தள்ளி விடுகின்ற இயல்பான திறமையுடன் வேகமாக ஓடிய பிறகு, எப்படி உடனே நிற்பது என்ற சந்தேகமும் கூடவே வந்துவிடுகிறதல்லவா! பந்துடன் ஓடிவந்து நிற்கவேண்டுமென்ருல், தாண்டிக் குதித்தவாறு இரு கால்களே யும் விரித்து கிற்கலாம். முன்னெரு கால் பின்னெரு கால் என்றவாறும் கிற்கலாம். கால்களை விரித்து நின்ருல், சுழற் தப்படி (Pivot) வைக்க, ஏதாவது ஒரு காலே பயன்படுத்தலாம். முன்பின்கை நின்ருல், பி ன்ன ங் காலை மட்டுமே சுழற் தப்படியாக சுலபமாகப் பயன்படுத்தலாம். ஓடிவரும் எதிராளி எதிர் கின்று மறைத்தால், பந்தைப் பின்புறமுள்ள தரையில் தட்டி, மறுபுறம் வரச் செய்து, பாதை மாற்றி முன்னேறிச் செல்கின்ற பந்துடன் ஒடும் முறையும் உண்டு. எதிராளி இடதுபக்கம் இருந்தால் வலது பக்கமாகவும், வலது பக்கம் கின்ருல் இடது பக்கமாகவும் தட்டிக்கொண்டு பந்துடன் ஒடவேண்டும். இறுதியாக ஒன்று. பந்தைத் தரையில் தட்டிக் கொண்டு ஓடுகின்றபொழுது, ஒடுகின்ற திசையையும், கொண்டிருக்கின்ற நோக்கத்தையும் எதிர்க்குழுவினர் புரிந்துகொள்ளாத நிலையில்தான் செல்லவேண்டும். இதற்கு அதிகப் பயிற்சி தேவை. பயிற்சியில் ஈடுபட்டுப் பழகிக் கொள்பவர்கள் உறுதியாக சிறந்த புகழ்தனே அடைய முடியும். வளையத்தைக் காப்பதற்காக உள்ள இரண்டு காப்பாளர் களும் (Backs), பந்துடன் ஒடும் திறமையில் பரிபூரண அனுபவம் உள்ளவர்களாக இருத்தல் மிக மிக அவசிய LD sT(35LD. -