பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 தாங்கள் எறியவேண்டிய வளையத்தின் அருகிலோ, அல்லது அதன் வட்டப் பரப்பிற்கோ வந்து, தங்கள் குழு முன்னட்டக்காரரிடம் பந்தைத் தருவதற்கு. பந்துடன் ஓடிவரும் முறையே அனுகூலமானதாகும். அதிக சாதக மான பலனையும் தருவதாகும். அதே சமயத்தில், எதிர்க்குழுவினரின் தடுப்பைத் தவிர்க்கவும், தங்கள் தாக்குதல்களைத் தொடுக்கவும் இம்முறை பயன்படுகிறது. தங்கள் பகுதியிலிருந்து பங்தை முன்பகுதிக்குக் மகாண்டுவரும் காப்பாளர், அங்கு தடுக்க யாரும் இல்லாதிருந்தால், சற்று பந்து உயரமாக எழும்வரை தரை யில் தட்டியவாறு பந்துடன் முன்னேறலாம். அவ்வாறு பந்துடன் வரும்பொழுதே, தங்கள் குழு ஆட்டக்காரர்களேத் தகுந்த இடங்களுக்குச் செல்லுமாறு சொல்லவும், மற்றும் வளையத்திற்குள் குறிபார்த்து எறியக் கூடிய சூழ்நிலையை உண்டுபண்ணுகின்ற அமைப்பை ஏற்படுத்தவும், எதிர்க்குழுவினரைத் தடுமாறச் செய்யவும். காப்பாளர் ஏற்பாடு செய்துவிடலாம். அது காப்பாளரிடம் இருக்கும் தனித் திறமையைப் பொறுத்தே அமையும். தடுப்பவர்கள் அருகில்வந்தாலும், சுற்றி ஆட்கள் இருக் தாலும் பந்தை சற்றுத் தாழ்ந்த உயரத்தில் எழுவதுபோலவே தட்டி ஆடவும். மேலே விளக்கிய முறைகளைக் கொண்டு, பந்துடன் ஒடும் முறையை நாம் மூன்று முறையாகப் பிரிக்கலாம். குறுக்கு நெடுக்காக ஒடல். அதாவது எதிரே எதிர்க் குழுவினர் வந்து தடுக்கும்பொழுது, ஒரு கை மாற்றி மறு கையால் பந்தினை மாற்றி மாற்றித் தட்டிக்கொண்டே, குறுக்கும் நெடுக்குமாக ஒடித் தன் முயற்சியில் வெற்றி அடைவது ஒருமுறை. .