பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 பந்துக்கும் எதிர்க்குழுவினருக்கும் இடையிலே தான் கின்று கொண்டு ஒடுதல், எதிரியுள்ள திசைப்பக்கம் தனது தோளேச் சாய்த்த வண்ணம், மறு கையால், பந்து கைக்கு எட்டாதவாறு பந்தை வைத்துத் தட்டிக்கொண்டு முன்னேறுதல் இன்ைெரு முறை. நேரே பந்துடன் ஒடுவதுபோல போக்குக் காட்டிவிட்டு, முன் தரையில் பங்தை தட்டுவது போல் பங்தைத் தன் பின்புறத் தரையில் தட்டி மறுபுறம் மறு கையால் பங்தை வாங்கித் தட்டிக்கொண்டு ஓடுதல் மூன்ரும் முறையாகும். இதற்கு உடலில் திறன், ஒடும் ஆற்றல், விரைவாகச் செயல்படும் உறுப்புக்கள், அவைகளை ஒழுங்காக இயல்பாக இயக்கி வழிநடத்தும் தன்மை மிகவும் தேவையானவை .யாகும். (3) வழங்கி ஆடுதல் அல்லது கைமாற்றி sogostil 13569 (Passing) பங்தைப் பிடிப்பதும், பந்துடன் ஓடி வருவதும், ஒவ்வொரு ஆட்டக்காரரின் தனிப்பட்ட திறமையாகும். கூடி விளையாடவேண்டிய குழுத் தன்மையும், குழு ஒற்றுமையும், ஒருவருக்கொருவரை புரிந்து கொண்டு, உண்மையிலேயே ஒன்று சேர்ந்து ஆடுகின்ற தன்மை, கைமாற்றிப் பங்தை வழங்கும் திறனில் இருந்துதான் தொடங்குகின்றது. பந்தைப் பிடித்துக் கொண்டவுடன், தானே பந்துடன் ஒடுவது. தானே பங்தை வளையத்திற்குள் எறிய முயல்வது, எப்பொழுதாவது ஒரு முறை, சந்தர்ப்ப சூழ்நிலை சரியாக அமையும்பொழுது நலம் பயக்கும். மற்றவர்களும் அந்தத் திறமையை மதித்துப் போற்றிப் புகழ்வார்கள்.