பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'58 பற்றினல், அவர் கேலிக்குரிய ஆளாகி விடுவதுடன். குழுவையே உருக்குலைத்துவிடுகின்ற துரோகியாகவும் மாறி விடுகின்ருர் என்ற நிலைக்கே கொண்டு வந்துவிடுவார். அந்த சுயநலத்திற்குத் தேகம் எவ்வளவு நேரங்தான் ஒத்துழைக்கும்? ஆகவே. வழங்கி ஆடும் விழுமிய முறையை ஆட்டக் காரர்கள் அனைவரும் ஒரு நெறியுடனும் நேர்மையுடனும் பந்தைப் பாங்கருக்கு வழங்குதல் என்ருல் என்ன? எப்படி என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். எதிரிகள் இடையில் வந்தாலும், இடையூறு செய் தாலும், அவர் கையிலே பந்து கிடைக்காமல், தகுந்த இடத்தில், தகுந்த நேரத்தில், தகுந்த விரைவுடன், தக்க வழியிலே பந்தை வழங்கி, கை மாற்றித் தருதலே வழங்குதல் எனப்படும்.

  • - சரியாகவும், முறையாகவும், திறமையாகவும் வழங்கிக் கொண்டால், ஆதுவே ஆட்டத்திற்கு அழகையும். ஆட்டத்தின் வெற்றிக்குரிய வாய்ப்பையும் வழங்கிவிடும். கவனமின்மை, அக்கறையின்மை, குறிப்பில்லாமல் தன் விருப்பம்போல் வழங்குதல் எல்லாமே எதிர்க் குழுவினருக் குரிய வெற்றிக்கு வழிகாட்டியாகிவிடும்.

ஆகவே, பந்தைத் தமது பாங்கருக்கு வழங்குவதற்கு முன் எத்தனை முறைகளில் எப்படியெல்லாம் பங்தை வழங்கலாம் என்பதையும் நாம் புரிந்து வைத்துக் கொண்டு பழகிக் கொள்வதற்குமுன், பங்தை வழங்கவும் ஆ எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை விளக்குவோம். *