பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o ५ यद्रसरल ? முன் னுரை வெற்றி பெறுவது மட்டுமே விளையாட்டின் நோக்க மல்ல. முக்கியமுமல்ல. விளையாட்டில் கற்றுக் கொள்கின்ற அன்பு, பொறுமை, அடக்கம், ஒற்றுமை, அடுத்தவரை மதிக்கக் கற்றுக்கொள்ளும் அறிவு, புலனடக்கம் போன்ற குணங்கள்தான், வாழ்வுக்குத் தேவைப்படுகின்றன என்பதால், வாழ்க்கையை முன்னேற்றும் கருவியாகவே நாம் விளையாட்டைக் கொள்ள வேண்டும். வாழ்க்கையிலே விளையாட்டின் பங்கு ஈடு இணையற்றது என்பதால்தான், விளையாட்டுத்துறை நூல்கள் தமிழிலக் கியத்தில் அதிகம் படைக்கப் பெற வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். அந்த ஆன்ற விருப்பத்தினை நிறைவேற்றும் செயலா கவே, என் முயற்சி கடந்த பத்தாண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. - விளையாட்டுத்துறை பற்றிய கலைச் சொற்கள் ஒருசில, தமிழிலே வாய் வழக்கிலே இருந்தாலும், நூல் வடிவிலே இல்லாத குறையைப் போக்கவும், அதிகமான கலைச் சொற்களைப் படைக்க வேண்டும் என்ற என் அவாவின் காரணமாகவும், தரமான தமிழ் இலக்கிய நூல்களைத் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கும், தமிழறிந்த நெஞ்சங் களுக்கும் தொடர்ந்து தந்திருக்கிறேன். தந்து கொண் அடிருக்கிறேன். தனியகை மேற்கொள்கின்ற முயற்சிகளில், குறை யிருக்கும். குறை போக்கி நிறைகாண அன்பர்கள் தருகின்ற அறிவுரையை நான் என்றும் எதிர்நோக்கியிருக்கிறேன்.