பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 பந்தாட்டத்திற்கு என்று ஆடுகளத்தில் இறங்கி விட்டால், உடலும் உள்ளமும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் விறைப்பாகிவிடும். அதுபோல் இல்லாமல், இயல் பாக (Natural) இருக்க முதலில் பழகிக் கொள்ளவேண்டும். அப்பொழுதுதான், மனம் நினைப்பதற்கு ஏற்றவாறும், ஆட்டத்தின் தேவைக்கேற்றவாறும் உடல் உறுப்புக்கள் வளேயும். அதன் காரணமாக, வேகத்துடன் வருகின்ற பந்து, துள்ளாமல் துடிக்காமல் கைகளுக்குள்ளே வந்து அமர்வதற்கேற்ற பதமான நிலை வரும். எனவே, முதல் தேவை உணர்ச்சிவயப்படாத இயல்பான கிலேயாகும். இரண்டாவதாக, உடலை சமநிலையில் (Balance) வைத்திருக்கவேண்டும். ஆடும்போது, வேகமும் உண்டு. மிதமும் உண்டு. இடைப்பட்ட கிலேயும் உண்டு. ஓடுதற்கும் உடனே நிற்பதற்கும் உடல் சமநிலையில் இருந்தால்தான், பங்தைப் பெற தர, தடும்ாற்றம் இல்லாமல் இருக்கும். பந்தையும் குறித்த இடத்திற்கு. குறித்த வேகத்தில், குறித்த முறையில் அனுப்பவும் அடையவும் எளிதாக இருக்கும். மூன்ருவதாக, பங்தை எறிவதற்குமுன், தன் பாங் கரின் இடம் எங்கு என்று பார்த்துத் தெரிந்துகொள்வது கல்லது. அதற்காக அவரை அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கவும் முடியாது. பாங்கரைப் பார்ப்பதை தெரிந்துகொண்டால்கூட, எதிர்க் குழுவினர் அவர் முன்னேபோய் கின்றுகொண்டு, பந்தைத் தடுத்தாடி விடுவார்கள். எனவே, எங்கேயோ பார்ப்பது போல பார்வையை வைத்துக்கொண்டு. பாங்கருக்கு எங்கே. எப்படி வழங்குவது என்பதிலேயே முழு நோக்கத்தையும் வைத்து சூழ்நிலையைக் கண்காணித்து, முன்னரே தங்கள் பயிற்சிக் காலத்தில் கொண்டு பழகிய சைகையின் படி வழங்க வேண்டும். இல்லையேல் எதிரி கைக்குப் பந்து கிடைக்க, பின்னர், பந்துக்காக அவர்கள் பின்னே ஒடித் தொலைக்கவேண்டும். . . .