பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 நான்காவதாக, பங்தைப் பிடித்திருக்கின்ற இவர், வழங்கப் போகிருரா, பந்துடன் ஒடப் போகிருரா, வளையத்திற்குள் பந்தை எறியப் போகிருரா என்பதை, எதிர்க்குழுவினர் யூகித்துத் தெரிந்துகொள்ளாதவாறு பங்தை முதலில் பிடித்துப் பழகிக் கொள்ள வேண்டும். உதாரணமாக, பந்தைத் தலைக்கு மேலே பிடித்து. பின் கீழே வயிற்றுக்கு முன் கொண்டுவந்து நிறுத்தி இன்னும் கொஞ்ச நேரங்கழித்து, தரையில் தட்ட முயற்சித்தோ அல்லது வழங்கவோ ஆள் தேடினல், நேரம் வீணுகுவதுடன், எதிர்க் குழுவினர் அதற்குள் தங்களேத் தயார் செய்துகொண்டு, தாக்கி ஆட முனைந்து விடுவார்கள். ஆகவே, பங்தைப் பிடிக்கும் பாங்கில் ஒரு நளினம் இருக்கவேண்டும். - இப்பொழுது மேற்கூறிய முறைகளில் ஏதாவது ஒன்றில் எறியக்கூடிய நிலையில் இருப்பவர், எப்படி எறிந்து வழங்க வேண்டும் என்று பார்ப்போம். தன் பாங்கருக்குப் பங்தை வழங்கும் போது, அவருக்கு முன்னலோ அல்லது தூரத்திலோ எறிந்து, அல்லது தலைக்கு மேலே எறிந்து, வாங்குபவரைத் தள்ளாட வைப்பதும் தடுமாறச் செய்வதும் சரியான வழங்குதல் அல்ல. ஆளேப் பார்த்து பந்தை வழங்குவதைவிட, இடை வெளி பார்த்து அதனுள் பாங்கரை ஓடச் செய்து. பின் பங்தைப் பிடித்துக் கொள்ளுமாறு வழங்குவதும், ஒடுபவரின் வேகத்திற்கேற்பவே எறியப் பெறும் பந்தின் வேகமும் சரியாக அமைந்திருக்கவேண்டும். s பங்தை எறியும் திசையைப் பார்த்து, பின், உடலை முன்புறம் சிறிது இயக்கி அல்லது ஒரு தப்படி (Step) எடுத்து வைத்து எறிந்தால், தேவையான இடத்திற்கும் எறியலாம். திறமையாகவும் எறியலாம். இம்முறையை தொடக்கத்திலிருந்தே கற்றுத் தேர்ந்து கொள்ளவேண்டும்,