பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ÖI இன்னும் ஒன்றை நாம் வழங்குவதற்கு முன் கவனிக்க வேண்டும். எதிரிக்குக் கைக்கு எட்டுகின்ற துாரத்தில் இடைவெளி இருந்தால், எறியக்கூடாது. பந்து அவரின் கைக்கல்லவோ கிடைத்துவிடும். ஆகவே, எதிரியை ஏமாற்றி வேறு போக்குக் காட்டி, தடுமாறச் செய்து, தவறு. நேராதபடி, தன் பாங்கருக்கு வழங்குவதே சரியான வழங்குதல் ஆகும். பத்து அல்லது 15 அடி தூரத்திற்குள் இருந்தால், இரண்டு கைகளிலும் பந்தைப் பிடித்து வழங்கலாம். எறியலாம். அதற்குமேல் தாரமாக இருந்தால், ஒரு கையால் எறிந்து வழங்கில்ைதான் பந்து போய்ச் சேரும். இரு கையால் அதிக தூரம் எறிவது சிரமமாகத்தான் இருக்கும். இவ்வாறு வழங்கிக் கொள்வதில், வாங்குபவரும் வழங்குபவரும் ஒருவருக்கொருவர் அருகருகே ஒடிக் கொண்டு, குறுக்கும் நெடுக்குமாகப் பங்தைப் பெற்றுக் கொண்டு வளையம் நோக்கி ஓடுதல்; எதிரிகள் வழங்கு. கின்ற பந்தை இடைமறித்தும் பறிக்கப் பழகிக் கொள்ளுதல்; கடைக் கோட்டிலிருந்து தாங்கள் எறியும் வளையப் பகுதிக்கு அருகாமையில் இருக்கும் பாங்கருக்கு விரைவாகத் தூக்கி எறிதல்(Fast-Break)போன்றவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும். இனி, கைமாற்றி வழங்குவதில் உள்ள பல முறைகளையும் காண்போம். வழங்குதல் என்பதை மாற்றல் என்றும் கூறலாம். ஆகவே, வழங்கலே மாற்றல் என்று இங்கு கையாளுகிருேம். (4) (p65r £56irós lossopót) (Chest pass or Push pass) கூடைப் பந்தாட்டத்திலேயே.அதிகமாக பயன்படுத்தப் படுவது இந்த மாற்றல் முறைதான். ஆடுகளத்திற்குள்ளே மிகக் குறுகிய துாரத்திற்குள்ளேயும், சிறப்பான குறியுடன்