பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

02 வழங்குவதற்கும், இந்த முறை அதிகமாகப பயன் படுகிறது. # எல்லா கிலேமைகளிலும், எல்லா சந்தர்ப்பங்களிலும் எல்லோராலும் எளிதாக மேற்கொள்ளப்படும் இந்த மாற்றலுக்கு, பங்தை நெஞ்சுக்கு முன்புறமாக வைத் திருந்து, இரண்டு கைகளாலும் பிடித்து வைத்திருந்து பிறகு முன்னேக்கித் தள்ளி வேகமாக மாற்றுவதைத்தான் முன்தள்ளி மாற்றல்' என்கிருேம். பங்தைச் சுற்றி விரிந்து பரந்திருக்கும் விரல்களின் அமைப்பானது, கட்டை விரல்கள் பந்துக்குப் பின்புறம் இருக்க, மற்ற எட்டு விரல்களும் பந்துக்குப் பக்கவாட்டில் பதிந்திருக்குமாறு பிடித்திருக்க வேண்டும். பந்தை அதே கிலேயில் வைத்திருந்து, கொஞ்சம் சக்தியை சேர்த்து, முன்புறமாகத் தள்ளும்போழுது, கால்கள் இரண்டையும் சிறிதளவு இடைவெளிவிட்டு இணையாக, சமநிலையுடன் இருக்குமாறு வைத்துக்கொண்டு நின்ருல்தான், பங்தை இலாவகமாக வழங்கும் வசதி உண்டாகும். பந்தை முன்புறம் தள்ளியதும் கைகளை அப்படியே, நிறுத்தாமல், கைகளேத் தொடர்ந்து வருவதுபோல, விறைப் பாக நீட்டியிருக்கவும். அதே சமயத்தில், இணையாக இருந்த கால்களில் ஒன்றைத் தூக்கி ஒரு -ால் முன்னே இருக்குமாறு வைத்தும் பந்தை எறியலாம். மணிக்கட்டும் கைகளும் வலிவுடன் இருந்தால்தான். பந்தை வேகமாகவும், கன்ருகவும் எறியலாம். | கைகள் இரண்டும் விலாப்புறத்தில் தொடாமல இருக்கும்படி கைகளே வைத்துப் பங்தை நெஞ்சுக்கு நேரே பிடித்திருந்ததுபோல் அல்லாமல், பக்கவாட்டில் தொட்டுக்கொண்டிருப்பதுபோல் கைகளைப் பக்கவாட்டில்