பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணைத்தவாறு பந்தை முன்தள்ளி மாற்றும்பொழுது விரல்கள் அனைத்தையும் விரித்துத் தள்ளி, பிறகு கைகளே முழு அளவு முன்புறம் நீட்டிவிடவும். கூடைப் பந்தாட்டத் தொடக்கத்தில், முதன் முதலாக இந்த முன்தள்ளி மாற்றல்தான் இடம் பிடித்துக் கொண்டிருந்தது. நன்ருக இம் மாற்றலைப் பழகிக் கொண்டால், மற்ற மாற்றல்களும் எளிதாகவே வரும். (5) ஒரு கை துள்ளுமுறை மாற்றல் (One Hand Bounce Pass) - எதிராளி மிக அருகாமையில் நெருங்கி நிற்கும்பொழுது அவரின் தடுப்புக்கும் தாக்குதலுக்கும் தப்பி, தன் பாங்கருக் குப் பந்தை வழங்க இம்முறை பயன்படுகிறது. பந்தை வைத்திருப்பவர். ஒரு காலடி (Step) முன்னே வைத்து ஒரு கையில் பங்தை வைத்திருந்து, அதைத் தரையில் மோதித் துள்ள விட்டுத் தன் பாங்கருக்குப் பங்தை மாற்ற வேண்டும். * அதற்காக, பந்தினது தலைப்பாகத்தில் கைவைத்து (சிறிது அழுத்தித் தள்ளுதல் வேண்டும். அவ்வாறு வழங்கும் பந்தானது பாங்கரின் இடுப்புக்குக் கீழேயும் முழங்கால் களுக்கு மேலேயும் உயர்வது போல, தரையில் துள்ளவிட வேண்டும். * உடல் சமநிலையிலே இருக்க, ஒருகாலை முன்னே வைத்து தமது இடப்புறமாகவோ, வலப்புறமாகவோ வசதிக்கேற்ப மாற்றித் தரலாம் (வழங்கலாம்). எதிராளியின் கால்களுக்கருகே பங்தைத் தரையில் மோதித் துள்ள விடுவதால், அவருக்கு எடுத்தாட முடியாத -ருை இக்கட்டான நிலை ஏற்படும்.