பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9L– முடியாத நிலையில், வேறு வழியின்றி, தன் மிக அருகா மையிலுள்ள பாங்கருக்குக் கை மாற்றித் தரவே இம்முறை பயன்படுகிறது. | இம்மாற்றலினல், பங்தைப் பாங்கருக்கு எளிதாகவும் சுலபமாகவும் மாற்றி விடலாம். ஆனல் அதிக தூரத்தில் உள்ளவருக்கு வழங்கப் பயன்படாது. - எறிவதற்கு முன், சமமாக இணையாக இருக்கும் கால் களில் ஒன்றை, முன்னல் ஓரடி வைத்து எறிந்து வழங்கில்ை இனிதாக இருக்கும். (8) ஒருகை கீழ்நிலை மாற்றல் (One hand under hand Pass) இருகை கீழ்கில மாற்றலில் பந்தை எறிந்த பிறகும், இரண்டு கைகளும், பங்தைத் தொடர்ந்து வருவது போல் வந்து நீண்டு கிற்கும். ஒருகை கீழ்நிலை மாற்றலில், பந்து இருகைகளாலும் இடுப்புக்கருகில் பக்கவாட்டில் முன் போலவே பிடிக்கப் பட்டும், உயரமில்லாதவாறு பாங்கருக்கு வழங்கப்பெற்ற பிறகும், தொடர்ந்து வருவது ஒருகை தான். அவ்வாறு வழங்கும் ஒரு கையில்தான் சிறிது வலிமை சேர்த்து, பந்து தள்ளப்படுகிறது. இம்முறை, ஆட்ட நேரத்தில் நெருக்கடியான நேரங் களில், அடிக்கடி பயன்படுகிறது. (9) இருகை மேல் நிலை மாற்றல் (Two Hand over head Pass) எதிரே நிற்கும் குள்ளமான எதிர்க்குழு ஆட்டக் காரர்களை ஏய்க்கவும்.சமாளிக்கவும்.இந்தமுறை மாற்றலேயே உயரமான ஆட்டக்காரர்கள் பயன்படுத்துகின்றனர். கூடைப்-5