பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருசில நாடுகளில் தான் இம்முறை பயன்படுத்தப் படுகிறது என்ருலும், மிகவும் எச்சரிக்கையுடனும் விழிப் புடனும் இருந்து ஆடவேண்டியது மிக மிக அவசியமாகும். இரண்டு கைகளாலும் வளையத்திற்குள் பங்தை எறியும் பயிற்சியும் பழக்கமும் உள்ளவர்தான், இம்முறை மாற்றலை

விரும்புவர் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர். f |

o தலைக்கு மேலே பங்தை பின்புறமாகப் பிடித்திருந்து, எதிரே நிற்பவரை ஏமாற்றி, பாங்கருக்கு வழங்க வேண்டும். மற்ற முறைகளைப் போல, பந்தை வேகமாக வழங்கி மாற்ற முடியாது. சுழற்தப்படி எடுத்து, வளையத்திற்குள் பந்தை எறிகிற வருக்கு இம்முறையில் பங்தை வழங்கில்ை, சுலபமாகப் பிடித்து பங்தை எறிய வசதியாகவும் வாய்ப்பாகவும் இருக்கும். (10) இருகை பக்க நில மாற்றல் (Two Hand Side Arm Pass) lf பக்கக் கோடுகளுக்கு அருகே நிற்பவர்கள், தங்கள். கையில் உள்ள பந்தைத் தம் பாங்கருக்கு வழங்க, இம்முறை மாற்றலேயே உபயோகிக்கின்றனர். இரண்டு கைகளாலும் பங்தைக் காதுக்கருகில் பக்க வாட்டில் பிடித்திருந்து, அங்கிருந்து தம் பாங்கரை நோக்கி, பந்தை தலைப்பக்கமாக பின்னுக்குக் கொண்டு வந்து, அதன் பிறகு முன் நோக்கி எறிய வேண்டும். அதே சமயத்தில், இடது காலை முன்னுக்கு ஒரடி வைத்தும் எறிய வேண்டும். எறிந்து முடிந்த பிறகு, இரு கைகளும் தொடர்ந்து வந்து, நீண்டு நிலைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் மாற்றல் தாம் கினைப்பது போல் சுமுகமாக நடக்கும்.