பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 வாழ்வில் ஒரு முறையே வந்து போகிறது இளமை இளமைதான் வாழ்வின் வசந்த காலம். வசந்த கால வாழ்வின் சுவையைஅனுபவிக்காமல்,வாழ்வின் மேன்மையை கிலைநாட்டாமல் விட்டு விட்டு, இலை உதிர்காலத்தில் எழுந்து கிற்க முயல்வதோ, கோடை காலத்தில் குமுறிக்கொண்டு. கிடப்பதோ அறிவுடையோருக்கு அழகல்ல. இளமையின் எழுச்சியை வளமையில் சேர்க்கவேண்டும். உடலே இன்பங் காணும் உயர்ந்த பாதையில் நடத்திட வேண்டும் என்ருல் அதற்கு ஒரே வழி விளையாட்டுதான். விளயாடிக் களிக்கின்ற நெஞ்சத்தில்தான். கல யுணர்வு நிறைந்திருக்கும். கவலையுணர்வு மறைந்திருக்கும். காலமெல்லாம் சுவையுணர்வே மிகுந்திருக்கும். இது முன்னேர்கள் கண்டு கூறிய உண்மை மட்டுமலல. இங்காளிலும் ஈடுபட்டோர் அனைவரும் கண்கூடாகக் கண்டு கொண்டு அனுபவிக்கும் உண்மையாகும். உடல் நலத்துக்காக விளையாடுங்கள். உடல் மகி.மு. உள்ளம் திகழ வரும் சுகத்துக்காக விளையாடுங்கள். உள்ளுறுப்புக்கள் வலிவும் பொலிவும் பெற்று, தூய்மையும் திறமையும் பெற்று, செயல்பட விளையாடுங்கள். இந்த இன்பரகசியத்தை எல்லோரும் உணர வேண்டும். தினமும் பெறவேண்டும் என்ற வழியிலே, விளையாட்டுக் களேப் பற்றிய வரிசையில், கூடைப் பந்தாட்டம் உங்கள் கையில் தவழ்கிறது. s விளையாட்டைத் தெரிந்து கொள்ளுங்கள். புரிந்து கொள்ளுங்கள், அறிந்து ஆடுங்கள், சிறந்த வீரர்களாக விளங்குங்கள். நோக்கம் இதுவே.