பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 கிறைத்த நீராக, காட்டில் பூத்த மலராக, பாலேயில் எரியு கிலவாகத்தான் வீணாகும். ஆகவே, குறிபார்த்து எறிவதற்கேற்ற அமைப்பையும் அருமையையும் புரிந்துகொண்டவர்களால்தான், சிறங் ஆட்டக்காரர்களாக மலர முடியும், வளர முடியும். பந்தை வளையத்திற்குள் எறிவதற்கு முன்னல், ஒருவர் உணர்ச்சிவசப்படாத நிலையில்தான் இருக்கவேண்டும். உணர்ச்சி யின் வசமானல் உடல் விறைப்பாகிவிடும். உறுப்புக்கள் மனம்போல் இயங்காது. எதிர்பார்ப்பதும் நடக்காது. அதன் மூலமாகக் கவலை வரும். கோபம் பீறிடும். இதல்ை எதிர்மாருன செயல்கள்தான் நடக்குமே தவிர ஏற்ற உதவியோ உற்ற ப ய .ே ைஎதுவும் கிடைக்காது. எனவேதான், மனக் கிலேசத்தை வளர்க்கும் உணர்ச்சி வயப்படக்கூடாது என்கிருேம். அடுத்து தேவைப்படுவது தன்னம்பிக்கை. தன்னம்பிக்கை யின் மூலம் எந்தக் காரியத்தையும் சாதித்து விடலாம் என்பது அறிஞர்களின் கருத்தாகும். எதிர்க் குழு ஆட்டக் காரர்களின் ஆட்டத் திறமையைக் கேட்டு அஞ்சுவதோ, அதல்ை தாழ்வு மனப்பான்மை அடைவதோ கூடாது. தன்னம்பிக்கை இருந்துவிட்டால், அது அமைதியான மன கிலேயை உண்டாக்கும். சிறந்த இயல்பான உடல் நிலையைக் கொடுத்திருக்கும். குழ்நிலைக்கேற்ப நடந்துகொள்ளும் மனப் பக்குவத்தை, மாற்று வழிகளேத் தேடித் தந்திருக்கும். கூடவே வருகின்ற குழப்பத்தைக் கெடுத்து, காரண காரியத்தை ஆராய்கின்ற அறிவினைக்கொடுத்து ஆதரிக்கும். இல்லையேல், மாலை வேளையில் கயிற்றைப் பார்த்து பாம்பென்று கருதி பயந்தவன் கதையாகி, எதிலுமே ஆர் ஏற்பட, குழுவே தோல்வி பெறுவதற்குரிய லேயைத் தோற்றுவித்து விடும்.