பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71 மூன்ருவதாக, ஒருவருக்குத் தேவை, சூழ்நிலைக்கேற்ப, தெரிந்த திறன் நுணுக்கங்களேத் திறமையாகப் பயன் படுத்தும், கூர்மதியாகும். அத்துடன் ஆழ்ந்த அனுபவம். அடுத்தடுத்துக் குறையாமல் கொண்டிருக்கின்ற முயற்சி. குழு ஒற்றுமை, ஒன்று கலந்தாடும் ஒற்றுமை இவை களிருந்தால்தான் ஆட்டம் பரிபூரணமாகப் பரிமளிக்கும். அத்துடன் முன்னரே நாம் விளக்கியுள்ள உடல் சமநிலை (Balance) எப்பொழுதும் தேவைப்படும். முன்னர் குறிப்பிட்டுள்ளவாறு தேகத்தையும், மனகிலே யையும் தயார் நிலையில் வைத்துக்கொண்டு. வளையத்தை நோக்கிக் குறிபார்த்து எறிய வேண்டும். அவ்வாறு வளையத்திற்குள் பந்தினே எறியும் தூரத்தை மூன்று வகை யாகப் பிரித்திருக்கின்ருர்கள் ஆட்டவல்லுநர்கள். அவற் றையும் காண்போம். டி. வளையத்திற்கு அருகாமையில் இருந்து கொண்டு பந்தை எறிதல். அதாவது, தான் நிற்கும் இடத்திற்கும் வளையத் திற்கும் குறைந்தது 12 அடி துாரம் இடைவெளி இருப்பது போல. 12 அடிக்குட்பட்ட தூரத்திற்குள் எங்கு கின்று கொண்டு எறிந்தாலும் இது அருகிலிருந்து குறிபார்த்து எறிதல்' என்ற அமைப்புக்குள் அடங்கும். அடுத்து தூரத்திலிருந்து எறியும் அமைப்பு என்று ஒன்று உண்டு. வளையத்திலிருந்து 24 அடிக்கு அப்பால் கின்றுகொண்டு, குறிபார்த்து எறிவதாகும். இதற்கிடைப்பட்ட தூரத்து இடைவெளி அமைப்பும் உண்டு. அதாவது வளையத்திலிருந்து 12 அடியில் தொடங்கி 24 அடி தூரம் வரை உள்ள பகுதியில் கின்று பந்தை எறியும் முறையாகும். துாரத்தை வைத்துக்கொண்டு எறியும் தன்மையை குறித்துக் காட்டியதுபோலவே, எப்படி எறிவது. -எங்,