பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 "உயரே எழும்பு-ஒரு கையால் பங்தைப் பிடிகுறிபார்த்து எறி' என்ற வாசகத்திற்கு ஏற்ப, வளையத்தி னருகே கையும் மணிக்கட்டும் நீண்டிருக்க, பந்து உள்ளங் கையில் தேங்கியிருப்பதுபோல் வைத்திருந்து எறிய வேண்டும். இவ்வாறு வளையம் நோக்கி எறியப்பெறும் பந்தானது, வளையத்தின் பின்பக்கப் பலகையிலுள்ள நீண்ட சதுரத்திற் குள்ளாக மோதில்ை, நிச்சயம் பந்து வளையத்திற்கு உள்ளே போய்விடும். அதிக வேகத்துடன் பலகையில் மோதாமல், சரிசெய்து லாவகமாகப் போடுதல் வேண்டும். எறிவதற்கு முன் எதிரிகள் தடுத்தாலும் எரிச்சல் படாமல் எறியும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். (15) Gjálág, STs);60 (Jump-Shot) கூடைப் பந்தாட்டம் தோன்றிய காலத்தில், தூரத்தில் இருந்தே, குறிபார்த்து வளையத்தை நோக்கிப் பங்தை எறி யும் பழக்கமே அதிகமாக இருந்தது. அநேக சமயங்களில், எதிர்க் குழுவினர் எதிரே கின்று தடுத்துவிடக்கூடிய வாய்ப்பு இருந்தமையால், இரண்டு கைகளாலும் பங்தைப் பிடித்துத் தூக்கி, தூரத்தில்இருந்தே எறிவதற்கு ஆட்டக்காரர்கள் முயன்றனர். ஒரு சில சமயங்களைத் தவிர, மற்ற நேரங்களில் எல்லாம் பந்து வளையத்திற்கு அருகே கூட போக முடியாத நிலைமை கூட ஏற்பட்டிருந்தது. ஆகவே, இரு கைகளால் அதிகமான தூரம் எறிய முடியவில்லை என்பதைவிட, எதிரிகளும் எளிதாகத் தடுத்து விடுகின்றனர் என்ற காரணத்தினலேயே ஒரு கையில் அதன் உள்ளங்கை விரல்களில் ஏந்தி, அப்படியே தோளுக்கு மேலே உயர்த்தி, அங்கிருந்தே தரையை