பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 செயல்படுகிறது. ஆகவே, சக்தியில்லாத ஆட்டக்காரர்கள் இவ்வாட்ட எறி முறையை அடிக்கடி பயன்படுத்த முடியாது போகிறது. அதே சமயத்தில், ஓடி வந்து முன்னர் விளக்கியது போல குறிபார்த்து எறிவதற்கு அதிகத் திறமையும் கூர்மையும் அவசியம் வேண்டும். பாங்கரிடமிருந்து பந்தைப் பெற்ருே, அல்லது தன்னிட மிருக்கும் பந்தையோ எறிய வேண்டிய முறை இப்படித் தான். இரண்டு கால்களையும் தரையில் ஊன்றி, அங்கிருந்து தரையை உதைத்து எவ்வளவு உயரம் மேலே எழ முடியுமோ அந்த அளவு உயரம் சென்று, இடுப்பளவு உயரத்தில் இரு கைகளாலும் பிடித்திருந்த நிலையை மாற்றி, மேலே சென்றதும் வலது அல்லது இடது கை ஏதாவது ஒன்றில், உள்ளங்கை மற்றும் விரல்களில் பங்தை அமரச் செய்து, அங்கிருந்தபடியே அவசரப்படாமல், உணர்ச்சி வசப்படாமல், வலுவாகவும் விரைவாகவும் அதே சமயத்தில் சரியாகவும் வளையம் நோக்கி எறிய வேண்டும். இவ்வாறு எறிகிற பந்தை, வளையத்தின் முன் பகுதி யைப் (வளைவினை) பார்த்து எறியக் கூடாது. அது, பந்து தவறிப்போய்விடுவதற்குரிய நிலையைத் தந்துவிடும். மிகவும்: நம்பிக்கையுடன், வளையத்திற்குள் பந்து விழும் என்ற எண்ணத்துடன் இருக்க வேண்டுமானல், வளேயத்தின் பின்பகுதியைப் பார்த்து (பலகையின் ஒரம்) எறியும் பொழுதுதான், வளையத்தின் முழுபரப்பிற்குள்ளும் பந்து செல்வதற்குரிய தன்மை அமைகிறது. இந்த சாதாரண உண்மையைப் புரிந்துகொண்டுசெயல் படாததால்தான், பல சமயங்களில் எறிகின்ற பந்து அனைத்தும் வளையத்தில் விழாது தவறிவிடுகின்றன. ஆகவே, தாங்கள் இழைக்கின்ற தவற்றைத் தெரிந்து திருத்திக் கொண்டு ஆடும்பொழுது, திறமையும்வளர்கிறது. தகுதியும் பெருகுகிறது என்பதையும் நாம் கவனத்தில் கருத்தாகக் கொள்ள வேண்டும். -