பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 (16) ஒரு கையால் பந்தெறிதல் (One hand Set shot) முன்னர் விளக்கியது போலவேதான் இந்த எறி முறையும், என்ருலும், ஒரு சிறிய மாற்றம் இதிலே அடங்கி .யிருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. தாவிக் குதித்து முன் எறி முறையில் எறிந்தது போல, இந்த முறையில் இல்லை. ஆட்டக்காரர் தரையில் நின்று கொண்டுதான் எறிகின்ருர். இடது கையில்ை பங்தை எறிகின்ற ஒரு ஆட்டக்காரர், தன் இடது காலேயே முன் வைத்துப் போடுகின்ற உடல் அமைப்பே இதில் உள்ளதால், சில சமயங்களில் உடலுக்கு "இயல்பாக இயங்க முடியாமல் போகிறது. இலாவகத் தன்மையும் கிடைக்காது போய்விடுகிறது. சரியான உடலியக்கம் இல்லையென்ருல் குறி எப்படி சரியாக அமையும்l ஆகவே, இந்த ஒரு கை எறி முறையில் வெற்றி பெற விரும்புவோர் அதிகப் பயிற்சி செய்தால்தான் முடியும்