பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78. பிடித்திருந்து, பிறகு கைகளே மேலே உயர்த்தி, அப்படியே மணிக்கட்டை வளைத்து, விரல்களே முன்னுக்குத் தள்ளி. வளையம் நோக்கி எறிய வேண்டும். பங்தை எறிந்தபின், உடல் கிமிர்ந்த நிலையை அடைந்து விடுகிறது. தலைக்கு மேலாகப் பந்தை வைத்து எறியும் (Over hand Shot) ஆற்றல், அதிகப் பயிற்சியின் பிறகே பெறக்கூடிய சக்தியாகும். ...(18) 60D8 61185m #31 6Tp)36i) (Hook Shot) வளையத்திலிருந்து 10 அல்லது 15 அடிக்குள்ளாக, பந்துடன் இருந்து விளையாடும் நேரத்தில், எதிர்க் குழுவினர் நெருக்கமாக கின்று தடுத்து நிற்கும்பொழுது, முன்னே விளக்கியுள்ள முறைகளில் பங்தை வளையம் நோக்கி எறிய முடியாத சூழ்நிலை அமையும்பொழுது, எல்லோருக்கும் எட்டாதவாறு கையை உயர்த்தி வளைத்துப் பங்தை எறியும் முறையையே கொக்கி எறி' என்பார்கள். எதிரிக்கு எட்டாத அளவுக்குப் பங்தை ஒரு கையால் (வலது அல்லது இடது கை) பக்கவாட்டில் கொண்டு சென்று, அங்கிருந்து தலைக்கு மேலே உயர்த்தி, ஒரு காலால் தரையை உதைத்து, உயரே எழும்பி, அங்கிருந்து உள்ளங்கை மற்றும் விரல்களின் மேல் அமர்ந்திருக்கும் பந்தை வளையம் நோக்கி எறிய வேண்டும். இதேபோல், உடலை வளைத்து, இரண்டு கைகளாலும் - எறியக் கற்றுக்கொள்வதும் மிகவும் நல்லது. இக்கட்டான சமயங்களில், நல்ல பயனேயே இம் முறை நல்கும். இனி, எவ்வாறு எறிவது என்று கவனிப்போம். பந்தை எறிய வேண்டும் என்று எண்ணுகின்ற திசைக்கு எதிராக பந்தை வலது கையால் ஏந்தி, காலேக் குறுக்காக வைத்து அதாவது வலது கால் பின்னும், இடது கால் முன்னும்,