பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 இருப்பது போல் கின்று, கன்ருக உயர எழும்பி எறிய வேண்டும். எந்த நேரத்திலும், உடலைத் தள்ளாட விடுவதோ, சமநிலை இழப்பதோ கூடாது. பந்தானது பக்கம் செல்லும் கையுடன் சென்ருலும், முகமும் விழியும் வளையம் நோக்கியே இருக்க வேண்டும். - இடது கைத் தோளானது, வளையம் நோக்கி இருப்பது போல் உடல் அமைப்பு இருக்க வேண்டும். தாண்டிக் குதிப் பதற்கு முன், பந்து இரு கைகளிலும் இருந்து, தாண்டிய உடனே பந்து வலது கைக்கு மாற்றப்பட்டு, அந்தக் கை ண்ேடிருந்தவாறு அப்படியே மேலேறி, தலைக்கு மேலே கல்ல உயரத்திற்கு வந்தவுடன், அங்கிருந்தபடியே பந்தை எறிந்துவிட வேண்டும். பந்தை எறிந்தவுடன், வளையத்திற்கு இணையாக, இரு கால்களையும் விரித்து. முழங்கால்கள் வளைந்து நிற்க, முகம் வளையத்தை நோக்கி இருக்குமாறு கிற்க வேண்டும். இம் முறையின் மூலம், எதிரியின் தடுப்பிலிருந்து விடுபடுவதுடன், எளிதாகப் பங்தை எறிந்து வெற்றி எண் பெறவும் முடியும். \ எறியும்பொழுது உடல் விறைப்பாக இருக்கக்கூடாது. மிகவும் பதமாக இருக்க வேண்டும்.

  • . பயிற்சி முறை : மேலே கூறிய, எறி முறைகளை ஆட்டக்காரர்கள் அனைவரும் ஐயம் திரிபறக் கற்றுக் கொள்ள வேண்டும். அதன் பின், தனக்கு எந்த எறிமுறை இயல்பாக, எளிதாக வருகிறது என்பதையும் உணர்ந்து கொண்டு, தினந்தோறும் தனியாகவே வளையத்திற்குள் பந்தை எறிந்து பயிற்சி செய்ய வேண்டும்.