பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80. எங்கங்ெகே நின்று கொண்டு எறிந்தால், எதிரியால் தடுக்க முடியாமல் இருக்குமோ, அந்த நிலைகளேக் கண்டு கொண்டு, அங்கங்கே கின்று. பல கோணங்களில் (Angle) இருந்து பங்தை எறிந்து பழகி, எறி திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். s பந்தை வளையம் நோக்கி எறிவதற்கு முன். தரையில், ஒரு முறை பந்தைக் கீழே விழவிட்டுத் தட்டிக்கொள்வதும். அல்லது ஒரு தப்படி எடுத்து வைத்துப் போடுவதும், விறுவிறுப்பின்றி மந்தமான நிலையில் கின்று எறிவதும் விரும்பத்தகுந்த விளையாட்டு முறையல்ல. அது போன்ற சூழ்நிலையில் எதிரிகளுக்கு வசதியான சூழ்நிலையை அமைத்துத் தடுத்தாடக்கூடிய தன்மையைத் தந்துவிடும். ஆகவே, மேற்கூறிய வேண்டாத விரும்பத்தகாத பழக்க வழக்கங்களை ஆரம்பத்திலிருந்தே விட்டுவிடும் பயிற்சியை யும் மேற்கொள்ள வேண்டும். "பந்து தன்னிடம் வரட்டுமே என்று வரும் பந்துக்காகக் காத்திருக்காமல், பந்திடம் தானே சென்று பெறுவதும், பெற்ற உடன் எறிவதற்குத் தயாரான நிலையில் நிற்பதும். பிறகு ஏற்ற நிலையில், ஏற்ற எறி முறையைப் பயன் படுத்தவும் போன்ற திறன்கள் பயிற்சிக்குப் பிறகே வரும். எல்லா எறிகளிலும் சிறந்த பயிற்சி வேண்டும். ஒன்றி ரண்டு எறிமுறை போதுமென்று பயிற்சி செய்வது ஆட்டத்தில் பயன் தராது. எறியும்பொழுது "நிச்சயம் இந்த முயற்சியில் வெற்றி பெறுவோம்' என்ற தன்னம் பிக்கையுடன் எறியும் பண்பு வேண்டும். அதற்காக என்னல் முடியாதா என்ன?’ என்ற இறுமாப்பும் தலைக் கனமும் அங்கு தலைகாட்டவே கூடாது. தன்னம்பிக்கையை வளர்க்கவும், திறன் நுணுக்கங் களைப் பெருக்கவும் உண்மையான உழைப்பும், உன்னதப் பயிற்சியும் நிச்சயம் தேவை. :