பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 கொண்டும் முன்னேறிச் சென்று வளையத்தை நோக்கி வந்து பங்தை வளையத்திற்குள் குறிபார்த்து எறிய மேற்கொள் கின்ற முயற்சிகளேயே தாக்கி ஆடுதல் என்கிருேம். ஆகவே, தாக்கி ஆடும் குழுவினராக மாறி ஆடுகின்ற ஆட்டக்காரர்கள் பின்வரும் முறைகளைப் பக்குவமாகப் பின்பற்றி ஆடவேண்டும். பாதுகாப்பு: பந்துடன் ஒடி முன்னேறும் ஒரு தாக்கி ஆடும் குழு ஆட்டக்காரர் மேல் பாயவும், பாதை வழி நின்று தடுக்கவும், குறிபார்த்து எறிய விடாமல் குழப்பவும் போன்ற செய்கைகளில், வளையத்தைக் காத்து, தடுக்கும் குழுவினர் எப்பொழுதும் பரபரப்புடனும் துடிதுடிப் புடனும் இருப்பார்கள்; அந்த நிலையில், பந்துடன் செல் வோருக்குப் பாதுகாப்பு அவசியம் தேவைப்படுகிறது. h rவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று நமககுத் தெரிய வேண்டாமா? முன்னேறிச் செல்கின்ற அவருடன், பாங்கர் ஒருவர் எப்பொழுதும் பின்தொடர்ந்து சென்றுகொண்டிருக்க வேண்டும். அவர் முன்னேற்றம் முற்றுகை இடப்படுகின்றி பொழுது, அந்த வியூகத்தை உடைத்து மீளவும், வெளி வரவும், வளையத்திற்குள் எறிய இயலாதபொழுது தங்கள் குழுவினரிடம் தந்து விடவும், பரிமாறிக் கொள்ளவும், ப்ாதுகாப்பாக இருக்கும் பொருட்டு, பின்பற்றி வரும் ப்ாங்கருடன், தக்க பாதுகாப்பு ஏற்படுத்திக்கொண்டு ம்ற்றவ்ர் செல்வது மிக மிக அவசியம். ஒற்றுமை: தானே தனியாகச் சென்று, பந்தை எறிந்து வெற்றி பெற்றுவிடலாம் என்ற தடித்தனமான எண்ணம் எப்பொழுதும் தலைதுாக்கவே கூடாது. ஆபத்தான குழ்கிலேயில் எப்பொழுதாவது இப்படி செய்ய நேரலாம் என்ருலும், எப்பொழுதும் தனியாகவே செல்வேன்' என்று: