பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'85 குரங்குப் பிடியான கொள்கை கொண்டிருப்பது குழுவுக்கே கல்லதல்ல. தனிமையில் செல்ல நினைப்பதும், மீறிச் செல்வதும் மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமாகும். ஆகவே, பந்தை பாங்கருக்கு வழங்கியும், அவரிடமிருந்து வாங்கியும், இடையிடையே புகுந்தும், இடைவெளி அமைத்தும் முன்னேறும்பொழுதுதான், விரைவாகச் செல்ல முடிகிறது. பாதுகாப்புடன் இருக்க முடிகிறது. அத்துடன், தடுக்க முயல்பவர்களேத் தடுமாறச் செய்யவும், ஏமாற்றவும் முடிகிறது. - சந்தர்ப்பத்தை உண்டக்குதல்: எப்பொழுது பந்து தன்னிடம் வரும் என்று எதிர்ப்பார்த்து நிற்பவர்கள் வாழைப்பழச் சோம்பேறிகளாவார்கள். 'சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக் காமல் சந்தர்ப்பத்தை உண்டுபண்ணிக் கொண்டு செய லாற்றுகிறவர்களே சீக்கிரம் முன்னேறுகின்ருர்கள்' என்ற பழமொழிக்கிணங்க, பந்துக்காகத் தானே ஒடிப் பெறுவது தான் சாலச் சிறந்ததாகும். - எந்த கிமிடத்திலும் எதுவும் நேரலாம் என்பதற்கேற்ப, பந்தை வாங்கவும் வழங்கவும் கூடிய சந்தர்ப்பங்களே உண்டாக்கி, அவைகளுக்குரிய வாய்ப்பைத் தேடி ஆடுகளத் திற்குள் சுறுசுறுப்பாக இயங்கி, முன்னேறியும் முன் னேடியும் பெறவேண்டும். தாங்கள் முன்னல் ஓடிப் பந்தைப் பெறுவதானது தங்களுக்குப் பந்து கிடைத்துவிடுகிறது என்பதைவிட எதிரிகளுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காமல் செய்து விடுவதானது ஒரு வகை பாதுகாப்பல்லவா! படபடப்பு இல்லாமல் மேலும் ஆடலாம் அல்லவா! இடம் பார்த்து நட: பந்துடன் முன்னேறிப் போகுப் பொழுது, முட்டுக்கட்டை ஏற்பட்டால், எதிரிகளால் வழி மறைக்கப்பட்டால், த டு க் க ப ட் டால் அதற்காக,